பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

compile-time error

294

complex


compile-time error : மொழி மாற்று நேரப் பிழை : மூலக் குறியீட்டை மொழி மாற்றும் போது ஏற்படும் பிழை.

compiling : தொகுத்தல்.

compiling application : தொகுப்பு பயன்பாடு; மொழிமாற்றப் பயன்பாடு.

complement : நிரப்பு எண் : சேர்ப்பு எண் : ஒரு குறிப்பிட்ட எண்ணின் எதிர்மறையை உருவகிக்கும் எண். கடைசி முக்கிய இலக்கத்திற்கு ஒற்றுமையுடையதாக 10-ன் சேர்ப்பெண் மற்றும் 2-ன் சேர்ப்பெண் போன்று ஆதார எண்ணிலிருந்து எண்னின் ஒவ்வொரு இலக்கத்தையும் கழிப்பதால் வரும் எண். Radix Complement என்றும் அழைக்கப்படுகிறது.

complementary MOS (CMOS) : நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி எனும் பொருள்படும் Metallic Oxide Semiconductor (MOS) (Complementary MOS) என்பதன் குறும்பெயர். மாசை விட வேகமாக வேலை செய்கின்ற, ஏறக்குறைய மின்சக்தியைப் பயன்படுத்தாமலே இயங்கும் உலோக ஆக்சைடு. குறைக் கடத்தி சிப்பு. LSI-ஐ விடச் சிறந்ததல்ல. ஆனால் பேட்டரியிலிருந்து சக்தி பெறுகின்ற மின்னணு கைக்கடி காரங்கள் மற்றும் பிற கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

complementary operation : நிரப்பு கைச் செயல்பாடு : பூலியன் தருக்க முறையில், நேரெதிர் விடையை வரவழைக்கும் செயல்பாடு. இச் செயல்பாடு அதே தரவுகளின் மீதே நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஏ என்பது சரி என்ற மதிப்புடையது எனில் இல்லை ஏ என்பது தவறு என்ற விடையைத் தரும்.

complementation, boolean : பூலியன் நிரப்புகை.

complementing : நிரப்புதல்.

complement notation : நிரப்பு முறை.

complement, tens : பத்தின் நிரப்பெண்.

completeness check : முழுமைச் சரிபார்ப்பு : புலங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்றும் முழுப் பதிவுகளும் சோதிக்கப்பட்டது என்றும் உறுதி செய்வது.

complete word : முழுச் சொல்.

complex : கலவை : கலவை எண்களை (a+ib) பயன்படுத்தும் வகையில் சில கணினி மொழிகளில் உள்ள தரவு இனம்.