பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Complex Instruction Set

295

component software


Complex Instruction Set Computer (CISC) : கலவை ஆணைத் தொகுதிக் கணினி.

complexity : உட்சிக்கல்நிலை; கடுஞ்சிக்கல்.

complex number : கலப்பு எண் : a+ib என்ற வடிவில் உள்ள எண். a, b ஆகிய இரண்டும் மெய் எண்கள். i என்பது -1ன் வர்க்க மூலம் என்பது மெய்ப்பகுதி என்றும் b என்பது கற்பனைப்பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கலப்பு எனகளை இரு பரிமாண வரைபடத் தாளில் எக்ஸ்-ஒய் அச்சுகளில் ஆயத் தொலைவுப் புள்ளகளினால் குறித்துக் காட்டமுடியும். கிடைமட்ட அச்சில் (எக்ஸ்) மெய்ப்பகுதியும் a), செங்குத்து அச்சில் (ஒய்) கற்பனைப் பகுதியும் (b) இடம்பெறும். எக்ஸ், ஒய் அச்சுகள் முறையே மெய், கற்பனை அச்சுகள் என்றழைக்கப்படுகின்றன. வரை படத் தளம் கலப்புத் தளம் (complex plane) எனப்படுகிறது.

comp. newsgroups : காம்ப். நியூஸ் குருப்ஸ்; கணி. செய்திக் குழுக்கள் : யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலைப் பெயர். முன்னொட்டாக‌ (prefix) comp. என்ற சொல் இருக்கும். இந்தச் செய்திக் குழுக்களில் கணினி வன் பொருள், மென்பொருள் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான ஏனைய செய்திகளைப் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறும். யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலையில் அடிப்படையான ஏழு குழுக்களில் comp என்பதும் ஒன்று. ஏனைய ஆறு : news., rec., sci., soc., talk, misc ஆகியவை.

component : பொருள்கூறு; ஆக்கக்கூறு : கணினி அமைப்புச் சாதனம் : ஒரு கணினி அமைப்பில் அடிப்படை உறுப்பு, மூலக உறுப்பு; ஒரு பயன்பாட்டின் பகுதி. மென்பொருள் ஆக்கக் கூறுகளையும் குறிக்கும்.

component dialog box : பொருள்கூறு உரையாடல் பெட்டி; ஆக்கக் கூறு உரையாடல் பெட்டி.

component event : பொருள்கூறு நிகழ்வு; ஆக்கக்கூறு நிகழ்வு.

component object model : பொருள் கூறு மாதிரியம். ஆக்கக் கூறு பொருள் மாதிரியம்.

component reusability : பொருள் கூறு மறுபயன்பாடு; ஆக்கக் கூறு மறுபயன்பாடு.

component software : ஆக்கக் கூறு மென்பொருள்; பொருள் கூறு மென்பொருள் : கூறுநிலை மென்பொருளாக்கத்தில் பயன்