பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/297

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
COM port
composite display
296

படுத்தப்படும் பொருள்கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட் கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்கூறு ஒன்றினை தன் நிரலில் பயன்படுத்திக் கொள்ள முடியும். மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொருள்கூறு எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதனுள்ளே எழுதபபட்ட நிரல்கள் ஆனைத் தொடர்கள் எவை, அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளமலே அப்பொருள்கூறின் முழுப் பயனையும் நுகர முடியும்.

COM port : காம் துறை : பிற வெளிப்புற சாதனங்களுடன் தரவு தொடர்பு கொள்வதற்காக பீ. சி. யில் பொருந்தும் ஒரு நேரியல் வெளியீட்டு துறை.

கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf
காம் துறை

compose : உருவாக்கு.

compose message : செய்தியாக்கல்.

compose sequence : இயற்று வரிசை முறை.

composite : கலப்பு : அனைத்து மூன்று அடிப்படை ஒளிக்காட்சி (வீடியோ) நிற சமிக்கைகளும் (சிவப்பு, பச்சை, நீலம்) கலந்துள்ள ஒளிக்காட்சி சமிக்கை வகை. சில கணினி திரையகங்களில் உள்ள உருவங்களின் கூர்மையைக் கட்டுப்படுத்துகிறது. எலெக்ட்ரான் பீச்சு கருவியைப் பயன்படுத்தி மூன்று அடிப்படை நிறங்களை உருவாக்கும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

composite card : கலவை அட்டை : பலநோக்கு தரவு அட்டை அல்லது பல்வேறு பயன்பாடுகளைச் செயலாக்கம் செய்ய‌ தேவைப்படும் தரவுகளைக் கொண்ட அட்டை.

composite colour monitor : ஒருங்குசேர் வண்ணத்திரையகம்.

composite display : கூட்டுருத் திரைக்காட்சி : தொலைக்காட்சி மற்றும் சில கணினித் திரைகளின் காட்சிப் பண்பியல்பைக்