பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

composite video display

298

Compressed SLIP


செய்யப்படுகிறது. கலவை காட்சித்திரைகள் எனப்படும் சிக்கனமான வண்ண காட்சித் திரைகள் கலவை ஒளிக்காட்சியைப் பயன்படுத்தி தொலைக் காட்சி பெட்டியைவிட ஓரளவு சிறந்த படத்தை அளிக்கும். ஆனால் ஆர்ஜிபி காட்சித்திரை போன்ற உயர்தரத்தில் அளிக்க இயலாது.

composite video display : கூட்டு ஒளிக்காட்சித் திரை.

composition : எழுத்துக் கோப்பு : எழுத்துகளின் அளவுகள், முறைகள் மற்றும் ஒரு பக்கத்தில் அவற்றின் அமைப்புகளைத் தேர்ந்து எடுத்தல்.

compound document : கூட்டு ஆவணம் : சொற்கள் மற்றும் வரைகலை ஆகிய இரண்டும் உள்ள கோப்பு. கூட்டு ஆவணங்களில் குரல் மற்றும் ஒளிக்காட்சியும் இடம் பெறும்.

compound statement : கூட்டு கூற்று : தனியாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு அல்லது கூடுதல் ஆணைகளைக் கொண்டுள்ள தனி ஆணை.

compress : இறுக்கு; சுருக்கு : இடத்தை சேமிக்க தரவுகளைச் சுருக்குதல், தரவுகளைச் சுருக்க, செயல்பாட்டு ஆனையின் பயனீட்டுக் கோப்புப் பெயருடன் A-Z பின்னிணைப்பு சேர்க்கப்படுகிறது. Uncompress என்ற பயன்பாடு கோப்புகளை விரிவாக்கி பழையபடியே தரும்.

compressed disk : இறுக்கிய வட்டு; இறுகு வட்டு : ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டில் இயல்பாகக் கொள்ளும் அளவுக்கும் அதிகமாகத் தரவுவைப் பதிவதற்கென மென்பொருள் பயன்கூறுகள் உள்ளன. (எ-டு) ஸ்டேக்கர், டபுள்ஸ் பேஸ் போன்றவை. இவை வட்டில் உள்ள தரவுவை இறுக்கிச் சுருக்கிப் பதிவதன் மூலம் அதிகமான அளவு தரவுவைப் பதிய வழியமைத்துக் கொடுக்கின்றன.

compressed drive : இறுகு வட்டகம்; இறுகு இயக்ககம்.

compressed file : இறுக்கப்பட்ட‌ கோப்பு : வழக்கமானதைவிட குறைவான சேமிப்பு இடத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் சேமிக்கப்படும் கோப்பு.

Compressed SLIP : இறுகு ஸ்லிப் : ஸ்லிப் என்பது ஒர் இணைய நெறிமுறை (Internet Protocol). இதன் ஒரு பதிப்பு இறுகு ஸ்லிப் எனப்படுகிறது. இணைய முகவரித் தகவலை இறுக்கிச் சுருக்கிப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாய் சாதாரண ஸ்லிப் நெறிமுறையை