பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer architecture

302

Computer Augmented


பொதுவான வணிகக் கணினி பயன்பாடுகளில் கொள்முதல், கோரிக்கை விலைப்பட்டி, கணக்கெடுப்பு, சம்பளப்பட்டி போன்றவை அடங்கும்.

computer architecture : க‌ணினிக் கட்டுமானம் : கணினி அமைப்பின் வன்பொருளின் பருப்பொருள் அமைப்பையும், மற்ற வன்பொருள்களுடன் அவற்றுக்குள்ள உறவையும் பற்றி ஆராயும் கணினி பற்றிய ஆய்வு.

computer art : கணினிக் கலை : ஓவியர்களுக்கான கணினி கருவியைப் பயன்படுத்தி ஓவியர்கள் உருவாக்கிய வடிவம். வண்ணம் பூசும் தூரிகை, கரிபென்சில் அல்லது மனதின் ஒரு விரிவாக்கம் என்பதாக கணினியைக் கருதலாம். ஓவியர் அழகான உருவங்களைக் கனவு கண்டு கணினியைப் பயன்படுத்தி அவற்றை உயிரோட்டமுள்ளனவாகக் கொண்டு வரலாம். காட்சி வரை பட முறைகளிலும், அச்சுப்பொறிகள், இலக்கமுறை வரைவு பொறிகள், படியெடுக்கும் சாதனங்கள் போன்றவற்றால் கணினிக் கலைப் பொருட்களை உருவாக்கலாம்.

computer artist : கணினி ஓவியர் : கலைப் படைப்புகளை உருவாக்கக் கணினிகளைப் பயன்படுத்துபவர்.

computer assisted diagnosis : கணினி உதவிடும் நோயறிமுறை : வேகமாகவும், துல்லியமாகவும் நோயறிவதற்கும், மருத்துவர் நேரத்தைச் மிச்சப்படுத்தவும் கணினியை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல். மருத்துவத் தரவுகளைப் படித்து வழக்கமாக உள்ளதிலிருந்து மாறுபாடுகளை மதிப்பீடு செய்து நோய் என்ன வென்று அறிந்து கொள்ள கணினியைப் பயன்படுத்துதல்.

Computer Assisted Instruction (CAI) : கணினி உதவிடும் கல்வி : கல்வி கற்கக் கணியைப் பயன்படுத்துதல் படிநிலை முறையில் தொகுக்கப்பட்ட பாடங்களை மாணவர்கள் கணினி வழியாகப் பயிலலாம். மாணவரின் தகுதி, தேவை, திறனுக்கேற்ப பாட வரிசை மற்றும் உள்ளடக்கம் அமையும்.

computer-assisted learning : கணினிவழி கற்றல் : கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

Computer Assisted Manufacturing (CAM) : கணினி உதவி உற்பத்தி.

Computer Augmented Learning (CAL) : கணினி மேம்படுத்தும்