பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer center director

304

computer control


கும் சேவைகள் மூலமாகவும் பல தரபபட பயனாள‌ர்களுக்கு கணினிச் சேவைகளை வழங்கும் நிலையம்.

computer center director : கணினி மைய இயக்குநர் : ஒரு கணினி மையத்தின் பணியாளர்களை இயக்கும் தனி நபர்.

computer chess : கணினிச் சதுரங்கம் : சதுரங்க விளையாட்டை ஆடும் கணினி நிரல். 1970 முதல் ஏசிஎம் அமெரிக்க கணினி சதுரங்க சாம்பியன்ஷிப்புகள் வளர்ச்சிக்கு ஒரு கிரியா ஊக்கியாகவும், செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கு வரலாற்றுப் பதிவேடாகவும் விளங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில், மன்ற ஆட்டக்காரர்கள் நிலையிலிருந்து உலகின் மிகச்சிறந்த வரிசையில் நிரல்கள் முன்னேறி உள்ளன.

computer circuitry : கணினிச் மின்சுற்றமைப்பு.

computer circuits : கணினிச் மின்சுற்றுகள் : வாயில் மின்சுற்றுகள், சேமிப்பு மின்சுற்றுகள், தொடக்கும் மின்சுற்றுகள், தலைகீழாக்கும் மின்சுற்றுகள், மின்சக்தி பெருக்கும் மின்சுற்றுகள் போன்றவை இலக்கமுறை கணினிகளில் பயன்படுத்தப்படும் மின் சுற்றுகள்.

computer classifications : கணினி வகைப்பாடுகள் : இலக்கமுறை, தொடர்முறை என்று இரண்டு பெரும் பிரிவுகளில் கணினிகள் அடங்குகின்றன. இலக்கமுறை மற்றும் தொடர் முறைக் கணினிகளை ஒன்றாக இணைத்து கலப்பினம் என்று சொல்லப்படும் மூன்றாவது வகையும் உருவாக்கப்படுகிறது. மிகப்பெரிய மீத்திறன் கணினிகள் முதல் மிகச்சிறிய நுண்கணினிகள் வரை கணினிகளின் அளவு, விலை, திறன் மாறுபடுகிறது.

computer code : கணினிக் குறி முறை : ஒரு குறிப்பிட்ட கணினிக்கான எந்திரக் குறி முறை.

computer conferencing : கணினிக் கலந்துரையாடல் : ஒரு கட்டமைப்பில் பங்கு கொண்டுள்ள பலவற்றுக்கிடையேயான தகவல் தொடர்பு. மனிதர்களின் உண்மையான சந்திப்புக்கும், தொலைபேசி மாநாட்டமைப்புக்கும் ஒரு மாற்று ஏற்பாடாக தொலைத் தகவல் தொடர்புகள் வழியாக பலதரப்பட்டவர்கள் தங்களுக்குள் செய்திகளையும், தகவலையும் பரிமாறிக் கொள்வது.

computer control : கணினிக் கட்டுப்பாடு.