பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer control console

305

computer ethics


computer control console : கணினிக் கட்டுப்பாட்டுப் பணியகம்.

computer crime : கணினிக் குற்றம் : கணினி அமைப்பை தீயநோக்கங்களுக்குப் பயன்படுத்தி அனுமதியற்ற செயல்களைச் செய்ய கணினியைப் பயன்படுத்துதல். சிறிய ஏமாற்றுத் திட்டங்களிலிருந்து வன்முறைக் குற்றங்கள்வரை கணினிக் குற்றங்களின் தன்மை இருக்கும். சட்டமுறைகள் இன்னும் சரிவர வரையறுக்கப் படவில்லை. இந்தியா உட்பட சில நாடுகளில் மட்டுமே இதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

computer design : கணினி வடிவமைப்பு : ஒரு கணினி பற்றிய கருத்து, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கணினி வழி வடிவமைப்பையும் குறிக்கும்.

computer designer : கணினி வடிவமைப்பாளர் : ஒரு கணினியின் மின்னணு அமைப்பினை வடிவமைப்பவர். கணினி மூலம் வடிவமைப்பைவரையும் குறிக்கும்.

computer, digital : இலக்க‌முறைக் கணினி.

computer disease : கணினி நோய் : கணினிகளின் நினைவகத்தையோ, செயல்பாட்டையோ பழுதாக்கி எல்லா நிரல்களும் வீணாகுமாறு செய்வது.

computer drawing : கணினி ஓவியம் : கணினி வெளியீட்டுச் சாதனம் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட உருவம். பொதுவாக வரைகலை அச்சுப்பொறி அல்லது வரைவு பொறி (பிளாட்டர்) இதை வரையும்.

computer enclosure : கணினி நிலைப்பெட்டி : கணினியின் மின்சுற்று அட்டைகளையும், மின்சக்தி வழங்கலையும் பாதுகாக்க அமைக்கப்படும் பெட்டி அல்லது கொள்கலன்.

computer engineering : கணினி பொறியியல் : கணினி வன்பொருள் /மென்பொருள் அமைப்புகளின் வடிவமைப்பினை உள்ளடக்கிய அறிவுப்புலம். பல கல்லூரிகள் அல்லது பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பாக நடத்தப்படுகிறது.

computer errors : கணினிப் பிழைகள்.

computerese : கணினிய : கணினிகள் மற்றும் தகவல் சார்ந்த அமைப்புகளுடன் பணியாற்றும் மனிதர்களின் குழூஉச் சொற்கள் மற்றும் பிற சிறப்புச் சொற்கள்.

computer ethics : கணினிப் பண்பாடு; கணினி ஒழுக்கம் : கணினி வல்லுநர்கள் மற்றும் பயனாளர்


20