பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer graphics

307

computer independent


கலை அமைப்புகளைப் பயன்படுத்தும் வல்லுநர். படங்கள் அல்லது ஓவியங்கள் தோன்றுவதைக் குறிப்பிடும் பொதுச்சொல். எழுத்துகள் மற்றும் எண்களைப் பயன்படுத்துவதிலிருந்து வேறுபட்டதே வரைகலை.

computer graphics : கணினி வரைகலை : தொடக்க காலத்தில் கணினித் திரைகளில் வெறும் எழுத்துகளையும் எண்களையுமே பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம் திரைகளில் படங்கள் பவனி வருகின்றன. இதற்கு கணினி வரைகலைத் தொழில்நுட்பமே காரணம். படங்களை உருவாக்குவது, திரையில் காட்டுவது, நிலையாகப் பதிந்து வைப்பது ஆகிய பணிகளுக்கான பல்வேறு வழி முறைகளை கணினி வரைகலை நுட்பம் உள்ளடக்கியுள்ளது.

Computer Graphics Interface : கணினி வரைகலை இடைமுகம் : வரைகலைச் சாதனங்களான அச்சுப்பொறிகள், வரைவு பொறிகள் ஆகியவற்றுக்குரிய மென்பொருள் தர வரையறைகள் ஏற்கெனவே இருந்த ஜிகேஎஸ் (GKS -Graphics Kernel System) என்ற வரையறையின் இணைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது. பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு, வரைகலைப் படங்களை உருவாக்குதல், கையாளுதல், காட்சிப்படுத்தல், அச்சிடல் ஆகியவற்றுக்கான வரையறுக்கப்பட்ட வழிமுறைகளை வழங்குகின்றன.

Computer Graphics Metafile : கணினி வரைகலை மீகோப்பு : பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட‌ ஜிகேஎஸ் (GKS-Graphical Kernel System) தர வரையறைகளுடன் தொடர்புடைய தரக் கட்டுப்பாடு. ஒரு வரைகலைப் படத்தை ஆணைகளின் தொகுதியாக‌ உருவகிப்பது. அந்த ஆனைகளைக் கொண்டு அப்படத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு இதற்கான வரையறுத்த வழிமுறைகளை வழங்குகிறது. ஒரு வரைகலை மீகோப்பை வட்டில் சேமிக்க முடியும். ஒரு வெளியீட்டுச் சாதனத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.

computer independent language : கணினி சாராத மொழி : பேசிக், கோபால், ஃபோர்ட்ரான், பாஸ்கல், பிஎல்/1 போன்ற மொழிகளைப் பொருத்தமான மொழி மாற்றிகளுடன் எந்தக் கணினியிலும் பயன்படுத்தலாம். அத்தகைய பயன்பாட்டுக்கு வடிவமைக்கப்பட்ட உயர்நிலை மொழிகள்.