பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer industry

308

computerization


computer industry : கணினித் தொழில்துறை : கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் கணினி தொடர்பான பணிகளை அளிக்கும் நிறுவனங்கள், வணிகர்களைக் கொண்ட தொழில் துறை.

Computer Information System (CIS) : கணினி தரவு அமைப்பு (சிஐஎஸ்) : வன்பொருள், மென்பொருள், தரவு, மக்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாக்கம், சேமிப்பு, உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவைகளை ஒருங்கிணைந்த தொடர் பணிகளைச் செய்தல்.

Computer Input Microfilm (CIM) : (சிஐஎம்) கணினி உள்ளீடு நுண்படலம் : நுண்படலம் அல்லது நுண் அட்டையின் உள்ளடக்கங்களை நேரடியாகக் கணினிக்குள் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உள் வீட்டைக் கொண்ட தொழில் நுட்பம்.

computer instruction : கணினி ஆணை; கணினி வழி பயிற்று வித்தல்; கணினி அறிவுறுத்தம் : 1. ஒரு கணினி புரிந்துகொண்டு அதன்படி செயல்படுதற்குரிய ஓர் ஆணை, காண்க‌ machine instruction 2. கற்பித்தலுக்குக் கணினியைப் பயன்படுத்துவது.

Computer-Integrated Manufacturing (CIM) : கணினி - ஒருங்கிணைப்பு உற்பத்தி முறை : தொழிற்சாலை தானியங்கி மயமாதலில் கணினியைப் பயன்படுத்துவதன் இலக்குகள் எளிமைப்படுத்துதல், உற்பத்தி செயல்முறைகளையும் பிற உற்பத்தித் தன்மைகளையும் ஒருங்குபடுத்துதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒட்டு மொத்தக் கோட்பாடு. இதில் கேட்/காம் அமைப்பு அனைத்து உற்பத்தி செயல்முறைகளையும் கட்டுப்படுத்தி ஒருங்கினைக்கிறது. உற்பத்தி வடிவமைப்பாளர்களும், பொறியாளர்களும் பயன்படுத்தும் அதே தரவு தளத்தையே கணக்காய்வாளர்களும், மேற்பார்வையாளர்களும், பட்டியலிடுபவர்களும், உற்பத்தி திட்டமிடுபவர்களும் பயன்படுத்துவார்கள்.

Computer Interface Unit (CIU) : (சிஐயு) கணினி இடைமுகச் சாதனம் : கணினியுடன் வெளிப்புறச் சாதனங்களை இனைப்பதற்குப் பயன்படும் சாதனம்.

computerise : கணினி மயமாக்கு.

computerization : கணினி மயமாதல் : 1. இதற்கு முன்பு வேறு முறைகளில் செய்த