பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Computerized Axial

309

computerized numerical


செயலை கணினியைப் பயன்படுத்திச் செய்தல். 2. பரவலாக ஏற்றுக் கொண்டு கணினியைப் பயன்படுத்தி சமுதாயத்தின் உண்மையான தோற்றத்தை மாற்றுதல்.

Computerized Axial Tomography : CAT : கணினி மய ஆக்சியல் டோமோக்ராபி : கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடுகதிர் (எக்ஸ்ரே) தொழில்நுட்பம். இது ஒரு இடத்தில் படத்தை குறிப்பிட்ட உருவத்தின் வழியாக ஆழத்தில் காட்டும். அப்படத்தின் விவரங்களைக் கொண்டு வரவும், மாறும் திசைகளில் உருவத்தின் மூலம் செல்லும் ஊடுகதிர்களைப் பதிவுசெய்தல் மற்றும் உருவத்தின் அமைப்பைப் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்வதற்கு கணினி பயன்படுகிறது.

computerized database : கணினிமய தரவுத் தளம் : ஒரு நிறுவனத்துக்குரிய அனைத்துத் தரவுகளும் குறிப்பிட்ட வடிவமைப்பில் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தொகுதி. துல்லியம், ஒத்தமைவு, நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பு அனைத்தும் கொண்டிருக்கும்.

computerized games : கணினிமய விளையாட்டுகள் : பலவகையான புகழ்பெற்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளை விளையாட கணினிகளைப் பயன்படுத்துவது.

computerized game playing : கணினி மய ஆட்டம் ஆடுதல் : கணினிகளில் பலதரப்பட்ட விளையாட்டுகளை ஆடுவதற்கு நிரலமைத்து, பொழுது போக்கிற்காகப் பயன்படுத்துதல். டிக்-டாக்டோ, பேக்மேன், பிரேக் அவுட், ஸ்டார் ரைடர்ஸ், ஸ்பேஸ் வார், பிளாக் ஜாக், ஹேங்மேன், செஸ், செசர்ஸ் போன்ற பல விளையாட்டுகளை ஆட கணினி பயன்படுத்தப்படுகிறது.

computerized jargon : கணினி குழூஉச் சொல் மொழி; கணினி குழூஉச் சொல் : கணினி அறிவியலுடன் தொடர்புள்ள தொழில்நுட்பச் சொற்கள்.

computerized mail : கணினி மய அஞ்சல் : கணினி கருவி மூலமாக வணிக அமைப்புகளுக்கும், வீடுகளுக்கும் மின்னணு வடிவத்தில் அஞ்சல் அனுப்பும் தொழில்நுட்பம்.

computerized numerical control : கணினி மய எண் கட்டுப்பாடு.