பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer music

311

computer operations manager


உரைக்கும் ஆவணக் காப்பகம். இதில் பல தொடக்ககால கணினி அமைப்புகளும், கணினி முன்னோடிகளின் ஒலிநாடா குறிப்புக் கொண்ட தொகுப்பும் உள்ளன.

computer music : கணினி இசை : இசை அமைத்தல், அல்லது ஒலி ஏற்படுத்துதலில் ஏதாவது ஒரு நிலையில் கணினிக் கருவியைப் பயன்படுத்துதல்.

computer name : கணினிப் பெயர் : ஒரு கணினிப் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியைத் தனித்து இனங்காட்டும் பெயர். ஒரு கணினிப் பெயர் வேறொரு கணினிக்கு இருக்க முடியாது. களப்பெயராகவும் இருக்கக்கூடாது. பயனாளர் பெயர் என்பதும் கணினிப் பெயர் என்பதும் வேறு வேறாகும். பிணையத்தில் ஒரு கணினியின் பெயரைக் கொண்டே அதன் வளங்களைப் பிற கணினிகள் பெற முடியும்.

computer network : கணினி பிணையம்; கணினி கட்டமைப்பு : ஒன்றோடொன்று இணைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ள இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கணினிகள், முனையங்கள் மற்றும் தரவு தொடர்பு வசதிகளைக் கொண்ட கணினி அமைப்பு.

computernik : கணினியார் : கணினிகளைப் பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவழிக்கும் ஒரு நபர்.

computer numeric control : கணினி எண்முறைக் கட்டுப்பாடு : ஒரு எந்திரத்தைக் கட்டுப்படுத்த கேட்/கேம் மூலம் உருவாக்கப்பட்ட எண் கட்டுப்பாட்டு ஆணைகளைச் சேமிக்க கணினியைப் பயன்படுத்தும் ஒரு எந்திரக் கருவி, கட்டுப்பாட்டுத் தொழில் நுட்பம்.

computer on a chip : ஒரு சிப்பு கணினி : ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்று சிப்புவின்மீது அமைக்கப்படும் முழு நுண் கணினி.

computer operations : கணினி செயல் முறைகள் : தரவுகளை அன்றாட முறையில் திரட்டுதல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல், பராமரித்தல் ஆகியவற்றைச் செய்யும் கணினியின் செயல்பாடுகள்.

computer operations manager : கணினி செயல்முறை மேலாளர் : ஒரு நிறுவனத்தில் கணினி செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் நபர். பணியாளர்களை நியமித்தல் கணினி செய்ய வேண்டிய வேலைகளை முடிவு செய்தல் ஆகியவற்றைச் செய்யப் பொறுப்பேற்று இருப்பவர்.