பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer operator

312

Computer Press Association


computer operator : கணினி இயக்குநர்.

computer organisation : கணினி ஒருங்கிணைப்பு : பின்வரும் துறைகளைக் கையாளும் கணினி அறிவியல் பிரிவு. கணினி சி. பீ. யு ஒருங்கிணைப்பு ஆணைகள், முகவரியமைக்கும் முறைகள், சேமித்த நிரல் கோட்பாடு, நிரல் இயக்கம், உள்ளீடு/ வெளியீடு ஒருங்கிணைப்பு, கைகுலுக்குதல், நினைவகம், மைய நினைவகம், நுண்செயலி போன்றவற்றின் செயல் பாடுகள்.

Computer Output Microfilm (COM) : கணினி வெளியீடு நுண்படலம் : நுண்படலம் அல்லது நுண் அட்டைகளின் மீது கணினி வெளியீடுகளைப் பதிவு செய்யும் தொழில் நுட்பம். நேர்முக வெளியீடுகளான நுண்படலத்திலிருந்தும், ஆணைவழி வெளியீடுகளை காந்த நாடாவிலிருந்தும் இந்த நுட்பப்படி பதியலாம்.

computer, personal : சொந்தக் கணினி.

computerphile : கணினிப் பைத்தியம் : கணினியில் பணியாற்றுவதிலேயே எப்போதும் மூழ்கிப் போகின்ற நபர். இவர் கணினிகளைச் சேகரித்து வைப்பார். கணினிப் பணியே இவர் பொழுதுபோக்கு.

computer phobia : கணினி அச்சம் : கணினி பயன்பாடு, குறிப்பாக எந்திரன் மற்றும் தானியங்கிச் சாதனங்களின் பயன்பாடு குறித்து உளவியல் சார்ந்த அச்சம்.

computer power : கணினி சக்தி; கணினித் திறன் : பணி செய்வதில் கணினிக்கிருக்கும் திறன். பல வகையிலும் கணினியின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடிக்கு எத்தனை மில்லியன் ஆணைகளை நிறைவேற்றும் என்று அதன் வேகம் மதிப்பிடப்படுவதுண்டு (MIPS - Million Instruction Per Second) அல்லது வினாடிக்கு எத்தனை மிதவைப் புள்ளிக் கணக்கீடுகளைச் செய்யவல்லது என்ற முறையில் அளப்பதுமுண்டு (MFLOPS - Million Floating Point Operations Per Second) கணினியின் திறனை வேறு வகையிலும் மதிப்பிடலாம். மதிப்பிடுபவரின் தேவைகளையும் நோக்கங்களையும் பொறுத்தது.

Computer Press Association : கணினிப் பத்திரிகையாளர் சங்கம் : கணினித் தொழில்நுட்பம் பற்றியும் கணினித் தொழில்துறை பற்றியும் எழுதுகின்ற பத்திரிகைகளில், வலை பரப்