பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer store

315

computer type setting


computer store : கணினி கடை : ஒரு முழு கணினி அமைப்பையோ அல்லது சில உதிரிப் பாகங்களையோ வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய சில்லரைக்கடை. இந்தக் கடைகளில் மென்பொருள், புத்தகங்கள் மற்றும் இதழ்களும் கிடைக்கும். பெரிய கணினிக் கடையில் பலவகையான நுண்கணினி அமைப்புகள் கிடைக்கும்.

computer system : கணினி அமைப்பு; கணினி முறைமை : கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவுகளை பயனுள்ள தகவலாக செயலாக்கம் செய்யும் மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பு.

computer systems, audit of : கணினி முறைமைத் தணிக்கை.

computer telephone integration : கணினி-தொலைபேசி ஒருங்கிணைப்பு : தொலைபேசியில் வரும் அழைப்புகளை முறைப்படுத்துதல், மாற்று எண்ணுக்கு திசைதிருப்புதல், தானாகப் பதில் தருதல், ஒரு தரவு தளத்தில் உள்ள தரவுவைத் தேடி அறிவித்தல், தானாகவே இன்னொரு தொலைபேசி எண்ணை அழைத்து தரவுவைத் தெரிவித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் ஆட்களின் தலையீடு எதுவுமின்றி செய்து முடிக்கக் கணினியையும் கணினி மென்பொருள்களையும் பயன்படுத்தும் தொழில்நுட்பம்.

computer terminal : கணினி முனையம் : கணினியுடன் தொலைத் தகவல் தொடர்பு இணைப்புகள் ஏற்படுத்தும் உள்ளீட்டு வெளியீட்டுச் சாதனம். அதனிடம் மையச் செயலகம் இருந்தால் அது ஒரு அறிவாளி முனையம் என்றும், இல்லையென்றால் முனையம் என்றும் அழைக்கப்படுகிறது.

computer terminal, remote : சேய்மை கணினி முனையம்; தொலை கணினி முனையம்.

Computer Tomographic (CT) : (சிடி) கணினி ஊடுகதிர் உள் தளப்படம்.

computer town : கணினி நகரம் : கணினி எழுத்தறிவையும், சிறிய கணினிகளைப் பொது மக்கள் அணுகுவதையும் ஊக்குவிக்கும் கலிபோர்னியா நிறுவனம்.

computer type setting : கணினி அச்சுக்கோப்பு : ஓர் அச்சுப் பணிக்கான விவரத்தை சில சிறப்பு மென்பொருள்களில் தட்டச்சுச் செய்து அச்சிட தயார் செய்தல்.