பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer user

316

computing


computer user : கணினி பயனாளர் : ஒரு கணினி அமைப்பையோ அல்லது அதன் வெளியீட்டையே பயன்படுத்தும் ஒரு நபர்.

computer users group : கணினி பயனாளர் குழு : ஒரு கணினி அல்லது ஒரு குறிப்பிட்ட கணினி உற்பத்தியாளரின் ஒரு வகைக் கணினிகளில் நிரல்களை உருவாக்கி தங்களது அறிவினை பங்கிட்டுக் கொள்ளும் உறுப்பினர்களைக் கொண்ட குழு பெரும்பாலான குழுக்கள் கூட்டங்களை நடத்தியும், வணிகக் கருவிகளைப் பரிமாற்றங்கள் செய்தும், நிரல்களைப் பங்கிட்டும், தகவலை பரிமாற செய்தி அறிக்கைகளை விநியோகித்தும் செயல்படுபவர்கள்.

computer utility : கணினி பயன் கூறு : கணினிக் குறுபயன் : கணினித் திறனைப் பயன்படுத்தும் சேவை. நேரப் பங்கீட்டு கணினி அமைப்பையே இது பொதுவாகக் குறிக்கும். பயனாளருக்கு மென்பொருள்களும், தரவுகளும் கிடைக்கும். மையச் செயலகத்தில் உள்ள ஒருவரது சொந்த நிரல்களையோ அல்லது வேறிடத்திலிருந்து பெற்று கணினியில் ஏற்றியோ பயன்படுத்தலாம். சேவையில் உள்ள சில தரவுகளையும் மென்பொருள்களையும் அனைவரும் பயன்படுத்தலாம்.

computer vendor : கணினி விற்பவர் : கணினி கருவிகளை உற்பத்தி செய்வது, விற்பது அல்லது சேவைகளை அளிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனம்.

computer virus : கணினி நச்சு நிரல் (வைரஸ்) : வேறொரு நிரல் அல்லது தரவுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் நிரல். ஒரு நச்சு நிரலின் (வைரஸ்) சாதாரண‌ நோக்கம் கணினி அமைப்பைப் பிடித்துக் கொண்டு தரவு செயலாக்கத்தைத் தடுப்பதாகும். பிடித்த நிரல் இயக்கப்பட்டவுடன் முன்பு "துய்மை"யாக இருந்த மென்பொருளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும். இவ்வாறே பரவிக் கொண்டே செல்லும்.

computer vision : கணினிப் பார்வை : பார்த்தல், புரிந்து கொள்ளல் ஆகிய வசதிகளை கணினி பெற உதவும் அறிவியல்.

computer word : கணினிச் சொல் : ஒரு தனி முகவரி இடக்கூடிய சேமிப்பு இடத்தில் இடம் பெற்று, கணினியால் தனி சாதனமாகக் கருதப்படும் துண்மிகள், பைட்டுகளின் தொடர்.

computing : கணிப்பு; கணித்தல் : தரவுகளை செயலாக்கம் செய்ய