பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computing devices

317

concentrator


கணினியைப் பயன்படுத்தும் செயல். பயனாளர் விரும்புவதை கணினியைச் செய்யுமாறு செய்கின்ற கலை அல்லது அறிவியல்.

computing devices : கணிக்கும் சாதனம்; கணிப்புக் கருவி.

COM recorder : காம் பதிவி : கணினி வெளியீட்டை ஒளிப்பட உணர்வு படலத்தில் நுண் வடிவில் பதிவுச் செய்யும் சாதனம்.

COMSAT : காம்சாட் : தரவு தொடர்பு செயற்கைக் கோள் என்று பொருள்படும் Communication Satellite என்பதன் குறும்பெயர்.

CON : கான் (கன்சோல்) : எம். எஸ் டாஸ் இயக்க முறைமையில் விசைப்பலகை மற்றும் கணினித் திரையைக் குறிக்கும் கருத்தியலான சாதனப் பெயர். உள்ளீடு மட்டும் செய்ய முடிகிற விசைப்பலகை மற்றும் வெளியீடு மட்டும் செய்ய முடிகிற காட்சித் திரை இரண்டும் சேர்ந்து முறையே முதன்மையான உள்ளீடு/வெளியீட்டு ஊடகமாய் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் பயன்படுகின்றன்.

concatenate : சேர்த்தல் : இரண்டு அல்லது மேற்பட்ட எழுத்துச் சரங்களை ஒரே எழுத்துச் சரமாகச் சேர்த்தல் அல்லது காட்சித்திரையில் ஒரு வரியை அடுத்தவரியில் சேர்த்தல். Decatenate - க்கு மாறானது.

concatenated data set : சேர்த்த தரவு தொகுதி : தருக்க முறையில் தரவு தொகுதியைத் திரட்டுதல்.

concatenated key : சேர்க்கப்பட்ட திரவி : ஒரு பதிவேட்டை அடையாளம் காட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளை ஒன்றாகச் சேர்த்த திறவுச் சொல்.

concatenated operator : சேர்ப்பு செயற்குறி : கணினி நிரலாக்க மொழிகளில் இரு விவரக்குறிப்புகள் இணைக்கப் பயன்படும் குறியீடு.

concatenation : ஒன்றிணைப்பு; இணைத்தல்; பிணைத்தல்.

concatenation concentrator : சேர்ப்புச் செயல் மையம் : ஒரு மிகுவேக சாதனத்தில் பல குறைவேக சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும் சாதனம். குறைந்த வேகமுள்ள கணினிகளில் இருந்து வரும் தகவலை ஏற்றுக் கொண்டு அதிக வேகமுள்ள கணினிக்குத் தரும் ஒரு சிறப்பு நோக்கக் கணினி.

concentrator : செயல்மையம்; மையப்படுத்தி : ஒரு தனியான அதிவேக தகவல் தொடர்புக் கம்பியினைப் பயன்படுத்தி பல