பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

concept

318

concurrency control


தகவல்களை மெதுவாகச் செலுத்தும் சாதனம். பல் பயன்கள் அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

concept : கருத்துரு; மனவுரு : கருத்தமைவு.

concept, database : தரவுத் தளக் கோட்பாடு; தரவுத் தள எண்ணக் கருத்துரு.

conceptual scheme : கருத்துருத் திட்டவரை : தரவுத் தளங்கள் பல, மூன்று நிலைத் திட்ட வரைக் கட்டுமானத்தை ஏற்பவையாய் உள்ளன. தரவுத் தளத்தின் கட்டமைப்பு மற்றும் தரவு உள்ளடக்கம் இரண்டும் சேர்ந்தே திட்டவரைக் கட்டுமானத்தை நிர்ணயம் செய்கின்றன. மூன்று திட்டவரைகளுள் கருத்துருத் திட்டவரை (தருக்க முறைத் திட்டவரை) தரவு தள முழுமையின் மாதிரியை விளக்குவதாய் உள்ளது. எனவே இது அக மற்றும் புற (Internal and External) திட்டவரைகளுக்கு இடைப்பட்டதாய் விளங்குகிறது. அகத்திட்டவரை, தரவு சேமிப்பையும், புறத் திட்டவரை பயனாளருக்குத் தரவுவை வெளிப்படுத்தும் பணியையும் செய்கின்றன. பொதுவாக திட்டவரை என்பது தரவுத் தளம் வழங்கும் தரவு வரையறை மொழி (Data Definition Language - DLL) யின் கட்டளைகளால் வரையறுக்கப்படுகின்றது.

conceptual tool : கோட்பாடுக் கருவி : பொருள்களுக்குப் பதிலாக எண்ணங்களுடன் பணியாற்றும் கருவி.

concordance : சொல் தொகுதி விளக்கப் பட்டியில் : ஒரு ஆவணத்தில் உள்ள சொற்கள், தொடர்களின் வரிசைப்பட்டியல் குறிப்பிட்ட சொற்களும் தொடர்களும் எங்கே உள்ளன என்பதைக் குறிப்பிடுகிறது.

concurrency : உடன்நிகழ்வு : பொருள் மாதிரியத்தின் அடிப்படைத்தன்மைகளில் ஒன்று. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் இயங்காத பொருள் லிருந்து இயங்கும் பொருளை வேறுபடுத்துதல்.

concurrency control : உடன் நிகழ்வுக் கட்டுப்பாடு : டிபிஎம் எஸ்ஸில் தரவு தளத்திற்கு ஒரே நேர அணுகலை நிர்வகித்தல். ஒரே ஏட்டை ஒரே நேரத்தில் இரண்டு பயனாளர்கள் திருத்துவதைத் தடுக்கிறது. பரிமாற்றங்கள் மாற்று ஏற்பாட்டுக்கும், மீண்டும் பெறுவதற்கும் வரிசைப்படுத்துவது தொடர்பானது.