பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

concurrent

319

condensed


concurrent : ஒரே நெரத்தில் : ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளிக்குள் இரண்டு அல்லது கூடுதல் நிகழ்ச்சிகள் அல்லது நடவடிக்கைகள் நடைபெறுவது பற்றியது.

concurrent access : உடனிகழ்வு அணுகல்.

concurrent execution : உடன் நிகழ் நிறைவேற்றம் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கூறுகளை அல்லது நிரல்களை, ஒரே நேரத்தில் இயங்குவதுபோல் தோற்றமளிக்குமாறு செயல்படுத்துதல். ஒரு நிரலைப் பல்வேறு பணிக்கூறுகளாக அல்லது பல்வேறு புரிகளாக (threads) பிரித்து நேரப் பங்கீட்டு முறையில் ஒற்றைச் செயலியில் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் மூலமும் உடன் நிகழ் நிரல்களை நிறைவேற்ற முடியும்.

concurrent language : உடன் நிகழ்வு மொழி : பல்வேறு செயல்கூறுகள் ஒரே நேரத்தில் இயக்குவதற்கு உதவும் மொழி. இணைக்கட்டுமான அமைப்பு வன்பொருள்களில் இது அதிகம் ஏற்படும். ஒரு நிரலில் இரு வேறு பணிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தும் வசதி ஜாவா, சி# மொழிகளில் இவ்வசதி உண்டு.

concurrent object : உடன் நிகழ்வு பொருள் : கட்டுப்பாட்டின் பல இயக்கங்களுக்கும் ஈடு கொடுக்கும் ஒரு பொருள்.

concurrent operation : உடன் நிகழ் செயல்பாடு : நேரப்பங்கீட்டு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்களை ஒரே நேரத்தில் இயக்குதல்.

concurrent processing : உடன்நிகழ் செயலாக்கம் : ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு அல்லது மேற்பட்ட தரவு செயலாக்கப் பணிகளைச் செய்தல்.

concurrent programme execution : உடனிகழ் நிரல் இயக்கம் : ஒரே நேரத்தில் இரண்டு அல்லது பல நிரல்களை செயல்படுத்தல்.

concurrent programming : உடன் நிகழ் நிரலாக்கம் : பல பணிகளை ஒரே நேரத்தில் குறிப்பிடும் நிரல்களை உருவாக்குதல்.

condensed : சுருக்கப்பட்ட : தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு