பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

condensed type320

conditional paging



condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக எழுத்துகள் பொருந்தும் வண்ணம் அகலத் தில் சுருக்கப்பட் அச்செழுத்து.

condensed print : சுருக்கப்பட்ட அச்சு : வழக்கமான எழுத்து களைவிட (செங்குத்தாகவோ அல்லது குறுக்குவாட்டிலோ) சிறியதாக அச்சிட்ட எழுத்துகள்.

condition : நிபந்தனை; சூழ் நிலை : 1. குறிப்பிட்ட சூழ் நிலைகள், 2. இருக்கும் நிலைமை.


conditional : நிபந்தனைக்குட்பட்டது : ஒரு நிபந்தனை மெய்யாக இருக்கும்போது அல்லது மெய்யாக இல்லாத போது ஒரு நடவடிக்கையை அல்லது ஒரு செயல்பாட்டை , மேற்கொள்ளுமாறு ஒரு நிரலில் அமைக்கப்படும் கட்டளை தொடர்பானது.

conditional branching : நிபந்தனைக் கிளை பிரிதல் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் வேறு வேறு நிரல்களை அல்லது செயல்கூறுகளை செயல்படுத்த வைக்கும் கட்டளை அமைப்பு.

conditional branch instruction நிபந்தனை சார் ஆணை.

conditional paging

conditional compilation நிபந்தனை மொழிமாற்றம் : ஒரு நிரலின் மூல வரைவினை சில நிபந்தனைகளின் அடிப்படை யில் பொறிமொழியாய் மொழி பெயர்க்கும் முறை. எடுத்துக் காட்டாக நிரலை மொழிமாற்றம் செய்யும் நேரத்தில் (DEBUG) குறியீடு வரையறுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நிரலர் குறிப்பிட்ட பகுதிகள் மொழி மாற்றப் பட வேண்டும் என்று கட்டளை அமைக்க முடியும்.

conditioinal expression : நிபந்தனைக் கோவை; நிபந்தனை தொடர்.

conditional jump : நிபந்தனை தாவல் குறிப்பிட்ட விதிமுறை கள் பொருந்தி வருமானால் 'தாண்டுதல் ஏற்படுத்தும் ஆணை.

conditional jump instruction நிபந்தனை தாவல் ஆணை.

conditional line : நிபந்தனைக் கோடு.

conditional operators, : நிபந்தனைச் செயற்குறிகள்

conditional paging நிபந்தனைப் பக்கமிடல் : ஒரு குறிப்பிட்ட பகுதி. ஒரு பக்கத்தின் மீதமுள்ள இடத் துடன் முழுமையாகப் பொருந்தாவிட்டால் அடுத்த பக்கத்துக்கு