பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

321


conditional parameters

conducting

மாற்றும் சொல்செயலி பண்புக்கூறு.

conditional parameters நிபந்தனை அளபுருக்கள்.


conditional replace : நிபந்தனை மாற்றீடு : ஒரு சொல் செயலாக்கப் பணி. ஒரு குறியிட்ட பொருளைக் காணும் ஒவ்வொரு தடவையும் அதை மாற்ற வேண்டுமா என்று அது கேட்கும்.

conditional statement : நிபந்தனைக் கூற்று : ஒரு நிரல் குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே கட்டளைகளை நிறைவேற்றுமாறு அமைக்கப்படும் கூற்று.


conditional sum : நிபந்தனைக் கூட்டல்.

conditional transfer : நிபந்தனை மாற்றல் : பின்பற்றப்படுகின்ற நிரல்களின் வரிசையிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நிரல். இயக்கத்தின் விளைவைப் பொறுத்து, ஒரு பதிவு அல்லது பரிமாற்றம் அமைதல்.

condition code : நிபந்தனைக் குறிமுறை : முந்தைய பொறி ஆனையின் அடிப்படையில் ஒரு துண்மி தொகுதியில் ஒரு குறிப்பிட்ட துண்மி நிகழ் (on) அகல் (off) நிலைக்கு மாற்றப்படுவதுண்டு. பெரும்பாலும் தொகுப்பு மொழி (assembly language) அல்லது பொறி மொழிச் சூழலில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. நிபந்தனைக் குறிமுறைகள் பெரும்பாலும் வன்பொருள் தொடர்பானவை. ஆனால், மிச்ச வழிவு (carry overflow), சுழி விடை (zero result) அல்லது குறைநிலை (negative) விடைதரும் குறி முறைகளைக் கொண்டிருக்கும்.

condition entry : நிபந்தனை நுழைவு  : முடிவு பட்டியலின் நான்கு பிரிவுகளில் ஒன்று. நிபந்தனைக்குப்பின் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை யளிக்கிறது.

conditioning : நிபந்தனையிடல் : ஒரு குரல் ஒலிக்கற்றை அனுப்புக் கம்பியில் தகவல் அனுப்புதல் தன்மைகளை மேம்படச் செய்தல்.

condition portion : நிபந்தனைப் பகுதி.

condition stub : நிபந்தனைப் பொதிவு : முடிவு பட்டியலின் நான்கு பிரிவுகளில் ஒன்று. ஒரு செயல் தொடரினை முடிவு செய்ய கவனிக்கப்பட வேண்டிய அனைத்து காரணிகளையும் (மாற்றுகளையும்) விவரிக்கிறது.

conducting : மின் கடத்தல்.

21