பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322


conducting state

configure

conducting state : மின்கடத்தும் நிலை.

conductor : கடத்தி : மின் சக்தியை எடுத்துச் செல்லும் பொருள். insulator- க்கு எதிர்ச் சொல்.

CONDUIT : காண்டியூட் : கல்வி மென்பொருள் வெளியிடும் நிறுவனம். சோதனை பொட்டலத் தொகுதிகளையும் ஆய்ந்து, கல்வி அளிக்கும் கணினி நிரல்களையும், அது தொடர்பான அச்சிடப்பட்ட பொருள்களையும் விநியோகிக்கிறது.

conference : கலந்துரையாடல் : மாநாடு : தொலைபேசி மூலம் ஒரு கலந்துரையாடல் சாத்தியம். கணினி மூலமும் செயல்படுத்தலாம்.

conference tree : மாநாட்டு மரம் : தலைப்புகள் மற்றும் பயனாளர் குறிப்புகளுடன் அமைக்கப்பட்ட ஒரு வகையான செய்தி அறிக்கை. அதன் ஒவ்வொரு கிளையும் ஒரு பெரிய தலைப்பு. கிளை நீள்வதற்கேற்ப அதைப் பயன்படுத்துவோர் மேலும் விரிவாக்கலாம்.

confidence factor : நமபிக்கைக் காரணி.

confidentiality  : இரகசியத் தன்மை : தனிப்பட்ட அல்லது இரகசியத் தகவலை அனுமதியின்றி அனுகாமல் இருப்பதற்கான பாதுகாப்பின் தரம்.

configuration : தகவமைவு : ஒரு அமைப்பாக இயங்கும் வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி சேர்க்கப்பட்ட எந்திரங்கள் மற்றும் மென்பொருள் கூறுகள். தரவு செயலாக்க அமைப்பு அல்லது வன்பொருளில் உள்ள பொருள்களின் வடிவமைப்பு அல்லது வரைபடம்.

configuration file : (கணினி) தகவமைவுக் கோப்பு : பெரும்பாலும் கணினியை இயக்கவைக்கும்போது மட்டுமே பெரும்பாலும் படிக்கும் ஒரு சிறப்புக் கோப்பு. கணினியின் மூலாதாரங்களை, குறிப்பாக நினைவகத்தை எவ்வாறு ஒருங்கமைத்து பிரிப்பது என்பதை வரையறுப்பது.

configuration management : தகவமைவு மேலாண்மை : ஒரு உற்பத்திப் பொருளின் உற்பத்திக் காலம் முழுமையும் மற்றும் இயக்க வாழ்நாள் முழு மைக்குமாக கணக்கெடுத்து, கட்டுப்படுத்தி, திட்டமிட்டு வடிவமைத்தல்.

configure : தகவமை : செயல்படத் தயார் செய் : சில குறிப்பிட்ட வன்பொருளையோ