பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

connection machine

324

Connectivity


களுக்கிடையேயான முறையான இணைப்பு தேவைப்படாமல் ஒவ்வொரு பாக்கெட்டிலும், மூல மற்றும் சேரும் முகவரி களைச் சேர்த்தல். யு. டி. பி (UDP User Datagram Protocol) நெறி முறையில் தகவல் பரிமாற்றம் இவ்வாறுதான் நடைபெறுகிறது.

connection machine : இணைப்பு எந்திரம் திங்கிங் மெஷின் கார்ப்பரேசன் உருவாக்கிய இனைச் செயலாக்கக் கணினிகளின் குடும்பம் 4, 096 முதல் 65, 536 இடம் பெற்றிருந்தன. ஹைபர் கியூப் அல்லது பிற அமைப்புகளில் அவற்றை முடியும். சமிக்கை செயலாக்கம், பாவிப்பு நிகழ்வு , தரவு தளங்களில் விவரங்களைப் பெறல் போன்ற பயன்பாடுகளுக்கு இவை பயன்படுகின்றன. முன் முனையாக வேக்ஸ் (VAX) அல்லது பிற கணினிகள் தேவைபடுகின்றன.

connection matrix : இணைப்பு அணி.

connection oriented : இணைப்பு அடிப்படையிலான ;இணைப்பு சார்ந்த : ஓரு பிணையத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிணையங்களிலுள்ள இரு கணுக் (node) கணினிகளுக்கிடையே தரவு பரிமாற்றம் நடைபெற ஒரு நேரடி இணைப்புத் தேவைப்படுகிற தகவல் தொடர்பு முறைக்கு இணைப்பு சார்ந்த தரவுத் தொடர்பு என்று பெயர்.

connection-oriented network service (CONS) : இணைப்புசார் பிணைய சேவை.

connection oriented protocol : இணைப்புசார் நெறிமுறை.

Connection : இணைப்புகள்.

connection wizard இணைப்பு வழிகாட்டி,

connectivity : இணைப்புநிலை :

1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைபேசி இனைப்பின் தரத்தையோ, இரைச்சல் இல்லாத் தன்மையையோ தரவு தொடர்பு சாதனங்களில் அலைக்கற்றை அளவையோ குறிக்கும். 2. பிற சாதனங்களுக்கிடையே தரவுவை அனுப்புவதற்குரிய ஒரு வன் பொருளின் திறன், அல்லது பிற மென்பொருள் தொகுப்புகளு டன் தொடர்பு கொள்வதற்குரிய