பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

connectivity platform

325

consecutive



ஒரு மென் பொருளின் திறன். 3. பிணையத்திலுள்ள வேறொரு கணினியுடனோ, பிற வன் பொருள் சாதனத்துடனோ, பிற மென் பொருள் தொகுப்புடனோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய ஒரு வன்பொருள்/மென்பொருள் அல்லது ஒரு கணினி இவற்றின் திறனைக் குறிக்கிறது.

connectivity platform இணைப்பு நிலைப் பணித்தளம்.

connect node : இணைப்புக்கூணு : கணினி உதவிடும் வடி வமைப்பில் வரிகள் அல்லது சொற் பகுதிக்கான இணைப்பு முனை.

connector : இணைப்பி : வன்பொருள் அமைப்பில், இரண்டு வடங்களை இணைக்கவோ, ஒரு இணைப்பு வடத்தைச் சாதனத்துடன் இணைக்கவோ பயன்படுகிறது. (எ-டு : ஆர்எஸ் 23. 2. சி என்னும் இணைப்பி இணைக்கியின் இணைப்பு வடத்தை ஒரு கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது). பெரும்பாலான இணைப்பிகள் ஆண், பெண் என்கிற இரு வகைகளில் அடங்கிவிடுகின்றன. ஆண் இணைப்பிகள் (male connectors) ; ஒன்று அல்லது மேற்பட்ட பின்களைக் கொண்டிருக்கும். இவற்றை நுழை இணைப்பிகள் என அழைக்க லாம். பெண்வகை இணைப்பிகளில், ஆண் இணைப்பி களிலுள்ள பின்களை ஏற்பதற்கான துளைகள் இருக்கும். இவற்றை துளை இணைப்பிகள் என்று அழைக்கலாம்.

connector box : இணைப்புப் பெட்டி

connector, multiple : பன்முக இணைப்பி.

connector symbol : இணைப்புக் குறியீடு : சந்திப்புப் பகுதியைக் குறிப்பிடும் ஒரு வரைபடக் குறியீடு பாய்வு நிரல் படங்களில் சில அடையாளங்காட்டிகளைக் கொண்டதாக ஒரே பக்கத்தில் ஒடும் கோடுகளின் பிரிந்து போன பாணிகளை இனைக் கும் சிறிய வட்டம். ஒரு பாய்வு நிரல் படத்தின் பல்வேறு பக்கங் களின் பாய்வுகளை இணைக்கும் ஒரு ஐங்கோண வடிவம்.

connect time : இணைப்பு நேரம் : ஒரு அமைப்புடன் முனையத்தில் உள்ள ஒருவர் எவ்வளவு நேரம் இணைப்பு வைத்திருந்தார் என்பதைக் குறிப்பிடுவது.

connect using : இதன் மூலம் இணைத்திடு.

consecutive : தொடர்ச்சியான : எந்தவித பிற நிகழ்ச்சிகளின்