பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

contact manager

328

context sensitive



தடுப்பதற்காக விலை மதிப்புள்ள உலோகங்களின் மூலம் தொடர்பு கொள்ளப்படலாம்.

contact manager : தொடர்பு மேலாளர்.

container class : கொள்கலன் இனக்குழு வேறு இனக்குழுக் களின் பொருட்களைத் தனக் குள்ளே கொண்டுள்ள ஒர் இனக்குழு. பொருள் நோக்கு நிரலாக் கத்தில் பயன்படுத்தப்படுவது.

containing text : உரையடங்கிய

content உள்ளடக்கம் : ஒரு குறிப்பிட்ட சேமிப்பு இடத்தில் உள்ள முகவரியிடக்கூடிய அனைத்து தரவுகளையும் இது குறிப்பிடுகிறது.

content addressable memory உள்ளடக்க முகவரியிடும் நினை வகம் துணை சேமிப்பகத்தைப் போன்றது.

content adviser உள்ளடக்க ஆலோசகர்.

contention : பூசல் மோதல் தகவல் தொடர்பு மற்றும் கணினி கட்டமைப்புகளில் பயன் படுத்தப்படும் ஒரு சொல் இரண்டு சாதனங்கள் அனுப்பும் தகவல்களை ஒரே பாதையில் ஒரே நேரத்தில் பயணிக்கும் சூழ் நிலையை விளக்குவது. அமைப்பு விதிமுறைகளால் நெறிப்படுத்தப்படுவது. ஒரே நேரத்தில் இரண்டு செயலிகள் ஒரே சாதனைத்தை கட்டுபடுத்த முயலும்போது ஏற்படும் நிலையையும் குறிக்கும்.

contention resolution : மோதல் நிலைத் தீர்வு : இரண்டு சாதனங் களும் ஒன்றை அணுகும்போது எதற்கு இனைப்பு தரப்படு கிறது என்பதை த் தீர்க்கும் செயல்முறை.

contents directory : உள்ளடக்க பட்டியல் ஒரு உட்புற சேமிப்பகத்தில் குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் வழக்கச் செயலைக் குறிப்பிடும் தொடர்வரிசைகள்.

coritext : சூழல் வல்லுநர் முறைமையின் (Expert System) உரிமைப்பகுதி பகுக்கக் கூடிய பல்வேறு சிக்கல் பகுதிகள்.

context diagram : சூழ்நிலை வரைபடம் : மிக உயர்நிலை பாய்வு நிரல்படம். ஒரு கணினி அமைப்பின் எல்லைகளை வரையறை செய்கிறது. தனி செயல்முறையையும், தரவு உள்ளீடுகள், வெளியீடுகள் போன்றவற்றையும் காட்டுகிறது.

context sensitive : சூழ்நிலை உணர்வு குறிப்பிட்ட ஒரு நிரலை இயக்குவது. ஒரு விசை யைத் தொடுவது அல்லது