பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

continuing path control

330

continuous form paper


 களைத் தேடுவதைத் தொடர் வதற்கான டிபேஸின் கட்டளை.

continuing path control : தொடர்பாதைக் கட்டுப்பாடு : எந்திரன் இயங்கு நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சொல். தேவையான வளைவுப் பாதை வழியாக எந்திரனை நகர்த்திச் செல்வது.

continuity : தொடர்நிலை

continuity check : தொடர்ச்சி சரிபார்ப்பு : தொடக்கம் முதல் இறுதிவரை பாதை சமிக்கைகளை அனுப்புவதற்கு சரியாக இருக்கிறது என்பதை முடிவு சொல்ல ஒரு கம்பி, வழித்தடம் அல்லது மின்சுற்று ஒன்றை சோதனை செய்தல்.

continuous : அடுத்தது அல்லது அடுத்ததாக இருப்பது.

continuous analysis : தொடர் பகுப்பாய்வு.

continuous carrier : தொடர் சுமப்பி : தகவல் தொடர்புகளில் கம்பியில் தகவல்கள் அனுப்பப் படாவிட்டாலும் செல்கின்ற சுமப்பி அலைவரிசை.

continuous data structure அண்மை தரவுக் கட்டமைப்பு.

continuous-feed paper தொடர்ந்து வழங்கும் தாள் பக்கங்களுக்கிடையில் துளை யிடப்பட்டு ஒவ்வொரு பக்கத்தி லும் கிழிக்கக்கூடிய வகையில் அரை அங்குல துளைகள் உள்ள காகிதம்.

continuous forms : தொடர் படிவங்கள் : அச்சுப்பொறிகளில் தானாகவே அனுப்புவதற்கேற்ப வெளிப்புற விளிம்புகளில் சிறிய துளைகள் உள்ள விசிறி மடிப்புத் தாள் அல்லது சுருள் தாள். வெற்றுத்தாளாக இருக்க லாம். அல்லது சோதனைகள், விலைப் பட்டியல்கள், வரி படிவங்கள் போன்ற முன் பாகவே அச்சிடப்பட்ட படிவங் களாக இருக்கலாம்.

cortinuous form paper : தொடர் படிவத் தாள் : தொடர் எழுது


தொடர்படிவ காகிதம்