பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

continuous graphics

331

contour analysis


பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. அச்சுப் பொறியில் டிராக்டர் மூலம் அளிக்கப்படுகிற துளையிடப்பட்ட நாற்றுக் கணக்கான தாள்களைக் கொண்டது. முன்னதாகவே துளையிடப்பட்டு அச்சடிப்புக்குப்பின்னர் தனித்தனியாகப் பிரிக்கக் கூடிய தாள்கள், ஒரு பிரபல அச்சு ஊடகமாகிய இதை ஒரு முறை ஒன்று சேர்த்தால் காகிதத் தொகுதி முழுவதையும் கணினி அச்சுப்பொறியில் ஏற்றமுடியும். தனியாக எடுக்கக்கூடிய (முன் துளையிடப்பட்ட) ஒரு பகுதியில் ஸ்ப்ராக்கெட் துளையைப் பயன்படுத்தித் தொடர்தாள் அனுப்பப்படும்.
continuous graphics : ஒட்டிக்கொள்ளும் வரைகலை : ஒன்றை யொன்று தொட்டுக்கொள்ளும் சில எழுத்துகள் கொண்ட வரைபடங்கள்
continuous processing : தொடர் செயலாக்கம் : ஒரு அமைப்பில் அவை நிகழ்கின்ற வரிசையிலோ அல்லது நிகழ்ந்த உடனேயோ உள்ளீடு செய்யப்படும் நடவடிக்கைகள்.

continuous scrolling : தொடர்நகர்த்தல் : செய்திகளை வரிவரி யாக சாளரத்தில் மூலம் முன்னாகவோ பின்னாகவோ நகர்த்தல்.

continuous speech recognition : தொடர்பேச்சு அறிதல் : பேச்சு ஏற்பிக்கு ஒரு அணுகு முறை. சாதாரண இடைவெளிகளில் சராசரியான உரையாடல்களில் நடைபெறும் பேச்சை இது புரிந்து கொள்ளும்.
continuous stationary : தொடர்தாள்.
continuous tone : தொடர்நீழல் : ஒரு அச்சுப்பொறியிலிருந்து வெளிவரும் புள்ளிகள். அச்சிடலுக்குத் திரை செய்யப்படாத ஒளிப்படம்.
continuous tone image : தொடர்கூட்டுத் தோற்றம் : பல்வகை யான வண்ணக் கூட்டுகள் அல்லது சாம்பல்நிறக் கூட்டுகளைக் கொண்டதாக உள்ள தனித்தனிப் பகுதிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் வண்ணத் தோற்றம் அல்லது கருப்பு வெள்ளைத் தோற்றம்.
continuous tone printer : தொடர்மை அச்சுப் பொறி : ஒருவகை அச்சுப்பொறி, உருவப்படங் களை அச்சிடும்போது சாம்பல் நிற அல்லது வண்ணப்படி மங்களைத் தொடர்மை பூச்சு முறையில் மிக இயல்பான வகையில் அச்சிடும்.

contour analysis : படவேறுபாட்டு பகுப்பாய்வு : ஒ. சி. ஆர்