பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

contouring

332

control


முறையில் ஒரு ஒளிப் புள்ளி யைப் பயன்படுத்தி எழுத்தின் வெளிப்புற விளிம்புகளில் நகர்ந்து செல்வதன் மூலம் ஒரு எழுத்தின் தோற்றத்தைக் கண் டறிய உதவும் தொழில்நுட்பம்.

contouring : பட வேறுபாடு அமைத்தல் : கணினி வரைபட முறைமைகளில் ஒரு உருவம், பொருள் அல்லது அடர்த்திப் வெளிப்புறப் பொருளின் தோற்றத்தை உருவாக்குதல்.

contrast : மாறுபாடு : ஒ. சி. ஆர் முறையில் ஒரு ஆவணத்தின் அச்சிடப்பட்ட பொருள் அல்லது அது அச்சிடப்பட்ட பின்னனியைக் குறிக்கக் காட்டப்படும் வண்ண அல்லது நிழல் தோற்றத்தின் வேறுபாடுகள்.

contrast enhancement மாறுபாடு அதிகரித்தல் ஒளிர்மை அல்லது இருட்டினை அதிகரித்தல். உண்மையான இலக்கமுறை செயலாக்கமானது அது வருடும் பொருளின் நேர் கோடல்லாத வற்றைக் கண்டுபிடிப்பதைப் பொறுத்திருக்கிறது. பிடிப்பதன் தன்மையை அறிந்தால் சரியான மாறுபாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தலாம். மாறுபாடுகள் விரும்பும் வண்ணம் அதிகரிக்கப் படலாம்.

Control : கட்டுப்பாடு : இயக்கு விசை : 1. ஒரு கணினியையும் அதன் செயல்பாடு களையும் முறைப்படுத்தி மேலாண்மை செய்தல் பிழையற்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த சரியான நேரத்தில் சரியான வரிசையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கட்டுப்பாடு எனும் சொல் வன்பொருள்.