பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

control field

335

control menu



control field : கட்டுப்பாட்டுப் புலம் தரவு பதிவேட்டில் உள்ள ஒரு புலம். அதே பதிவேட்டில் உள்ள புலங்களை அடையாளம் கண்டு, வகைப் படுத்த பயன்படுவது.

control flow : கட்டுப்பாட்டு பாய்வு : ஒரு நிரலில் இயலக் கூடிய செயல்பாட்டு வழிகள் அனைத்தையும் துணுகிப் பார்ப் பது. பொதுவாக இது ஒரு வரை பட வடிவில் விளக்கப்படும்.

control flow chart கட்டுப் பாட்டுப் பாய்வு நிரல்படம்.

control instruction register கட்டுப்பாட்டு ஆணை பதிவகம் : ஒரு சிறப்பு தற்காலிக சேமிப்பு இடம். கட்டுப்பாட்டகம் செயல் படுத்துகின்ற எந்திர ஆணைகள் இதில் இடம் பெறும்.

control key கட்டுப்பாட்டு விசை : கணினி விசைப் பலகையில் உள்ள சிறப்புச் செயல் விசை. கணினியை ஒரு பணியைச் செய்யுமாறு ஆணையிடு வதற்கு வேறொரு விசையுடன் இந்த விசையைச் சேர்த்து ஒரே நேரத்தில் அழுத்தினால் போதும்.

controlled variable : கட்டுறுமாறி . ஒரு மொழியில் உரை யாடல் முறை அமைப்பில் ஒரு குறிப்பிட்ட மதிப்புகளின் தொகுதி தொடர்பான மாறி.

controller கட்டுப்படுத்தி : கட்டுப்பாட்டுப் பொறி . ஒரு வெளிப்புற உறுப்பை இயக்குவதற்கு கணினிக்குத் தேவைப்படும் சாதனம்.

control listing : கட்டுப்பாட்டு பட்டியலிடல் : ஒரு குறிப்பிட்ட சமயத்தில் நடைபெறும் ஒவ்வொரு வணிகப் பரிமாற்றத் தையும் விவரிக்கும் விரிவான அறிக்கை.

control logic : கட்டுப்பாட்டு; தருக்கம், கட்டுப்பாட்டு அளவை : ஒரு கணினியின் செயலாக்க பணிகளைச் செயல்படுத்தும் வரிசை முறை.

control logo : கட்டுப்பாட்டு சின்னம் : எந்திரன்கள் (ரோபோக்கள்) இயக்கும் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு லோக்மைரன் சின்னம்.

control loops : கட்டுப் பாட்டு மடக்கிகள்.

control mechanism : கட்டுப்பாட்டு எந்திர நுட்பம்.

control memory : கட்டுப் பாட்டு நினைவகம் : இயக்கத்திற்காக ஆணைகளைச் சேமிக்கப் பயன்படும் கட்டுப் பாட்டகத்தின் நினைவகம்,

கணினியின் உள்

control menu : கட்டுப்பாட்டு பட்டி : சாளரங்களைக் கையாளும்