பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

control menu box

336

control sequence



கட்டளைகளைக் கொண்ட பட்டி, பயன்பாட்டுப் பிம்பங்கள் மற்றும் உரையாடல் பெட்டிகளில் கட்டுப்பாட்டு பட்டி இருக்கும். கட்டுப்பாட்டு பட்டியைத் திறக்க சாளரத்தின் தலைப்புப் பட்டை இடது கட்டுப்பாட்டு பட்டிப் பெட்டியை பயன்படுத்த வேண்டும்.

control menu box : கட்டுப் பாட்டு பட்டி பெட்டி சாளரத்தின் தலைப்புப் பட்டையில் இடது பக்கத்திலேயே இது எப்போதும் இருக்கும். கட்டுப் பாட்டு பட்டி இதில் அடக்கம்.

control panel : கட்டுப் பாட்டு பலகம் : 1. மனிதக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள கணினி கட்டுப்பாட்டு முகவு. மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள ஒரு கோபுபுறை. 2. அலகு பதிவு சாதனங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் நீள் கம்பிகளைப் பொருத்தும் அட்டை .

control programme கட்டுப் பாட்டு நிரல் கணினி மற்றும் அதன் மூலாதாரங்களை முழுவதுமாக மேலாண்மை செய்வதற்க்குப் பொறுப்பான செயலாக்க அமைப்பின் நிரல்


control punch : கட்டுப்பாட்டுத் துளை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் செய்யுமாறு கணினிக்கு ஆணையிடும் ஒரு குறிப்பிட்ட குறியீட்டைக் கொண்ட அட்டை.

control register, access : அணுகு கட்டுப்பாட்டுப் பதிவகம்.

controls1 : கட்டுப்பாடுகள் செயலாக்கத் தொழில் நுட்பங்கள் அல்லது தரவுகளின் துல்லியம், பாதுகாப்பு, நம்பகத் தன்மை அல்லது முழுமையை உறுதி செய்யும் முறைகள்.

controls2இயக்குவிசைகள் விசுவல்பேசிக் போன்ற பயன்பாட்டு மொழிகளில் பயனாளர் இடை கருவி உருவாக்கக் முகங்களை மிக எளிய முறையில் முறையில் இருக்கின்றன.

control section : கட்டுப் பாட்டு பிரிவு நிரலின் ஆனைகளின் படி கணினியின் இயக்கத்தை வழி நடத்தும் மையச் செயலக சாதனத்தின் பகுதி.

control sequence : கட்டுப் பாட்டு வரிசை ஒரு நேரத்தில் ஒன்று மட்டும்

என்ற வரிசையில் ஆனைகளை இலக்கமுறை கணினிக்கு தேந்தெடுப்பதற்க்கான வழக்கமான முறை.