பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

control signal

337

control Structures


control signal : கட்டுப்பாட்டு சமிக்கை : எந்திரங்களையும், செயல் முறைகளையும், தானியங்கி முறையில் கட்டுப்படுத்த கணினி உருவாக்கும் சமிக்கை.

control statement : கட்டுப்பாட்டுக் கூற்று : ஒரு நிரலில் வேறொரு பகுதிக்கு கட்டுப்பாட்டை மாற்றுவதற்கான கட்டளை அமைப்புகளை வரிசை முறையில் செயற்படுத்துவதை நிறுத்தும் இயக்கம்.

control station : கட்டுப்பாட்டு நிலையம் : முகவரியிடல், வாக்களித்தல், தேர்ந்தெடுத்தல், திரும்பப் பெறல் போன்ற கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேற்பார்வை செய்யும் கட்டமைப்பு நிலையம். கொள்கை நிலை அல்லது பிற வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகள் ஏற்படும்போது ஒழுங்கினை ஏற்படுத்தப் பொறுப்பானது.

control store : கட்டுப்பாட்டு கிடங்கு : நுண் நிரல் கட்டுமான அமைப்பில் நுண் ஆணைகளை சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு, அதிவேக சாதனம்.

control string : கட்டுப்பாட்டுச் சரம் : வன்பொருளைக் கட்டுப்படுத்துகின்ற எழுத்துகளின் தொடர் வரிசை. அச்சுப்பொறிகளுக்கும், மோடம்களுக்கும் அனுப்பப்படுகின்ற தரவுகளின் உள்ளேயே கட்டுப்பாட்டுச் சரங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். தம் தகுதியைக் குறிப்பிடும் சிறப்பு எழுத்திலிருந்து அவை தொடங்கும்.

control strip : கட்டுப்பாட்டுப் பட்டை : 1. பதிவு செய்யப்பட்ட தரவுகளை ஏற்கெனவே அறிந்த மதிப்புகளுடன் ஒப்பிட்டு, துல்லியத் தன்மையைப் பாதுகாக்கத் தேவையான திருத்தங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவீட்டுக் கருவிகள். 2. கணினிப் பணியின்போது அடிக்கடிப் பயன்படுத்தக்கூடிய நிரல்களை, தரவுகளைக் குறுவழி (shortcuts) வடிவில் எளிதில் கையாளக் கூடிய இடத்தில் குழுவாக இருத்தி வைப்பது. நேரம், தேதி, மின்கலச் சக்தியின் நிலை போன்றவை இக்குழுவில் இடம் பெறலாம்.

control structures : கட்டுப்பாட்டு கட்டளை அமைப்புகள் : சொற்றொடர் ஆணைகளை வரிசை முறையில் செயல்படுத்துவதிலிருந்து விலகிச்செல்வதைக் குறிப்பிடும் ஆணைத் தொடர் மொழியில் உள்ள ஒரு வசதி.


22