உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

absolute coordinates

33

abstract


கணினியால் செயல் படுத்தப் படும். இம்முறை அடையாளக் குறியீட்டு முறையிலிருந்து மாறுபட்டது.

absolute coordinates : நேரடி ஆயத் தொலைவுகள் : ஒரு மைய அச்சின் தொடர்பாகக் குறியிடப்படும் ஆயத் தொலைவு. சார்பு ஆயத் தொலைவு முறையின்படி முந்தைய ஆயத் தொலைவுகளை ஒட்டி வரு வதற்கு மாறானது.

absolute disk sectors : நேர் வட்டுப் பகுதி : ஒரு குறிப்பிட்ட எண்ணிடத்தில் உள்ள வட்டுப் பகுதி.

absolute error : தனி தவறு; தனி வழு முற்றுப் பிழை.

absolute link : நேரடித் தொடர்பு முழு இணைப்பு.

absolute movement : நிரந்தரப் பெயர்ச்சி : திரையில் உள்ள ஒரு வடிவை ஒரு குறிப்பிட்ட எக்ஸ் - ஒய் ஆயத் தொலைவு இடத்துக்கு மாற்றுதல். இது சார்நிலைப் பெயர்ச்சியிலிருந்து மாறுபட்டது.

absolute path : முழுமையான பாதை ; முழுப்பாதை : ஒரு கோப்பின் இருப்பிடத்தை வட்டு (drive) அதன் மூலக் கோப்பகத் (root directory) திலிருந்து தொடங்கி முழுமையாகக் குறிப்பிடும் முறை (எ-டு) c : \windows\ system\ms386. dll

absolute pointing device : முற்றப் பொருந்திய சுட்டுக்கருவி : பேனாவையொத்த சுட்டுக் கருவிகளில் ஒரு வகைக் கருவிக்குப் பெயர். பயனாளர், வரைகலைப் பட்டிகை மீது வலது மேல் மூலையில் பேனாச் சுட்டுக் கருவியை வைக்கும் போது, திரையிலுள்ள கட்டுக்குறி (cursor) யும் கணினித் திரையின் வலது மேல்முலைக்கு நகரும்.

இவ்வாறு திரையில் நகரும் நிலை கட்டுக்குறியின் இடத்துடன் பொருந்தி நகர்த்தப் படும் இடம் அல்லது நிலை இருப்பதால் கட்டுக் கருவிக்கு இந்தப் பெயரிடப்பட்டுள்ளது.

absolute URL : முழு யூ ஆர் எல்.

absolute value : நேர் அளவு : கூட்டல் அல்லது கழித்தல் குறியீடு இல்லாத எண் அளவு.

absolute vector : நேர் அளவு நெறியம் : கணினி வரைகலை முறையில் நேர் ஆயத் தொலைவுகளுடன வடிவமைக்கப்பட்ட . ஒரு அளவு நெறியம்.

abstract : கருத்தியல் : சுருக்கம் : பொழிப்பு : ஒரு ஆவணத்தினைப் பற்றிய சுருக்கமான விளக்கம்.