பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

coordinate dimensioning

342

copy fit


புள்ள தரவு மதிப்புகளின் தொகுதி. மின்னணு தரவுதாளில், இரண்டு எண்கள் மற்றும் எழுத்துகள் சங்கமித்து ஒரு கலத்தின் நெடுக்கை அல்லது கிடக்கையை அடையாளம் காணல்,

coordinate dimensioning : ஆயத் தொலை பரிணாமம் : பரிணாமம் அமைத்தல். இதில் புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட பரிணாமத்தினை வரையறுக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து போவது ஒரு வரையறுக்கப்பட்ட அச்சை ஒட்டி அளிக்கப்படும்.

coordinate indexing : ஒருங்கிணைந்த பட்டியலிடல் : 1. தனி ஆவணங்களை விரித்துரைத்தல் மூலம் பட்டியலிடும் முறை. சமமான நிலையில் உள்ள விரித்துரைப்புகளால் இது செய்யப்படுவதால் நூலகத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட வரைவு மூலம் தேடமுடியும். 2. தனிப்பட்ட சொற்களை ஒன்று சேர்க்கும் முறையில் சொற்களுக்குக்கிடை யேயான தொடர்பைக் காட்டும் பட்டியலிடல் தொழில் துட்பம்.

coordinate paper : ஒருங்கிணைந்த தாள் : இலக்கமுறை வரைவு பொறிகளால் உருவாக்கப்படும் படங்கள், வரைபடங்களுக்குப் பயன்படுத்தப்படும் வரைபட முறை காகிதம்.

co-processor : இணைச் செயலி : மையச் செயலியை ஓய்வாக வைத்திருக்க, நேரம் எடுக்கும் பணிகளைச் செய்யும் துணைச் செயலி. அதன் விளைவாக ஒட்டு மொத்த அமைப்பின் செயல் வேகம் அதிகரிக்கிறது. ஒரு மைய செயலி வேறொரு மையச் செயலியுடன் சேர்ந்து செயலாற்றி மொத்த அமைப்பின் கணிப்பு சக்தியைக் கூட்ட முடியும் அறிவார்ந்த முனையமும் இணைச் செயலகமாகச் செயலாற்றுகிறது.

copy : படி , பிரதி, நகல்; படி எடு : பிரதி எடு; நகலெடு : மூல நகல் மாறாமல் வேறொரு இடத்தில் தரவுவை மறு உற்பத்தி செய்வது.

copy backup : பாதுகாப்பு நகல்.

copy buster : நகல் கிளர்வி : நகல் பாதுகாப்புத் திட்டங்களை ஒதுக்கிச் செல்லும் நிரல். சாதாரண, பாதுகாப்பற்ற பிரதிகள் எடுக்க அனுமதிப்பது.

copy command : நகல் ஆணை.

copy disk : காப்பி டிஸ்க் : ஒரு நெகிழ்வட்டிலுள்ள தரவுகளை இன்னொரு நெகிழ் வட்டில் பதிவதற்கான எம்எஸ் டாஸ் கட்டளை.

copy fit : நகல் பொருத்தி : கிடைத்துள்ள இடத்தில் செய்தி யைப் பொருத்துதல்.