பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

copy, hard

343

CORBA


copy, hard , வன்நகல், தாள் நகல்.

copy holder : நகல் பிடிப்பொறி : விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது படிக்க வசதியாக காகிதத்தினை பிடித்துக் கொண்டிருக்கும் சாதனம், (முதுகு , தோள், கழுத்து, கண் தொல்லையைக் குறைக்க உதவுவதே இதன் நோக்கம்.

copying machine : நகலெடுக்கும் எந்திரம் : எழுதப்பட்ட/அச்சிடப்பட்ட பொருளின் நகலைத்தரும் மின்னணு எந்திரம் நிலைமின் ஒளிப்படவியலின் பிரிவான xerography தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது. புலனாகின்ற அகச்சிவப்பு, (அல்ட்ரா வயலட்) கதிர்கள், நிலை மின்சக்தி மாறும் தன்மையைக் கொண்டு ஒளிகடத்தும் ஊடகத்தில் நகல் எடுக்கப்படுகிறது.

copy programme : நகல் நிரல் : ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகளை வேறொரு வட்டுக்கு நகலெடுக்க வடிவமைக்கப்பட்ட நிரல். ஒரு கணினி மென்பொருளை நகல் பாதுகாப்பு முறையை நகலெடுக்கும் நிரல்.

copy protection : நகல் பாதுகாப்பு : தங்களது மென்பொருள்களை யாரும் நகல் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மென்பொருள் உருவாக்குபவர்கள் பயன்படுத்தும் முறைகள். மென்பொருளை சட்டத்திற்குப் புறம்பாக நகல் எடுப்பதிலிருந்து எதிராகப் பாதுகாப்பதற்காக, பெரும்பாலான உற்பத்தியாளர்கள் நகல் பாதுகாப்பு செயல்கூறுகளை தங்களது மென்பொருள்களில் சேர்த்திருப்பார்கள். நகல் பாதுகாப்பு முறைகள் உயர்நுட்பம் வாய்ந்தவை. ஆனால் பல நகல் பாதுகாப்பு நுட்பங்களை முறியடித்து, அத்துமீறி நகலெடுக்கும் அதி புத்திசாலி நிரலர்களும் உள்ளனர்.

copyright : பதிப்புரிமை : ஒரு வருடைய படைப்புக்கு சட்ட முறையான பாதுகாப்பு தருவது. கணினி மென்பொருளுக்கும் இது பொருந்தும்.

copyrighted software : காப்புரிமைபெற்ற மென்பொருள் : பணம் கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருள். மென் பொருளை உருவாக்குகின்றவரின் அனுமதியின்றி நகல் எடுக்கக்கூடாது.

copy, soft : மென் நகல். வட்டுநகல்.'

CORBA : கோர்பா : பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும்