பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cost effectiveness

347

country code


cost effectiveness : செலவின் விளைவு : இலாபங்கள் மற்றும் அவற்றை அடைய உதவும் மூலாதாரங்களுக்கான உறவின் செயல்முறை அல்லது அமைப்பின் விளைவு. செலவுகளைவிட பெறப்பட்ட பலன்கள் அதிகரித்தால் செலவு குறைவு என்று கருதப்படும்.

costing : செலவுக் கணக்கிடல் : ஒரு திட்டம், வேலை அல்லது பணிக்கு ஆகும் செலவுகளைக் கண்டறியும் முறை.

cottage key people : இல்லப் பணியாளர் : தங்கள் வீடுகளில் அமர்ந்து பணியாற்றி, தொலைத்தரவுத் தொடர்புகள், வட்டுகள் அல்லது பிற வழிகளில் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்பவர்கள்.

coulomb , கூலம் (ப்) : மின் சக்தி ஏற்கும் அடிப்படை எஸ். ஐ அலகு 6. 25 x 1018 எலெக்ட்ரான்கள் சேர்ந்து 1 கூலம் (ப்) மின்சக்தி ஏற்கிறது.

count : எண்ணிக்கை : ஒரு நிகழ்வு எத்தனை தடவை நடைபெறுகிறது என்பதில் அடுத்தடுத்த கூடுதல் அல்லது குறைவதின் ஒட்டுமொத்த எண்ணிக்கை.

counter : எண்ணி : ஒரு நிகழ்வு எத்தனை முறை நடைபெறுகிறது என்பதைக் குறித்து வைக்கும் பதிவகம் அல்லது ஒரு நிரலில் அத்தகைய எண்ணிக்கையை இருத்தி வைக்கும் ஒரு மாறி (variable).

counter, binary : இரும எண்ணி.

counter clerk : கணக்கெழுத்தர் : கணக்கிடு எழுத்தர்.

counter clockwise : இடச்சுற்று : வலது புறத்திலிருந்து இடது புறமாக நகர்த்தல்.

counter, control : கட்டுப்பாட்டு எண்ணி.

counter, ring : வளைய எண்ணி.

counter, step : படி எண்ணி.

counting devices : எண்ணிடும் சாதனம்.

counting loop : எண்ணிடும் மடக்கி : ஒரே செயலை குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்ப செய்யவேண்டும் என்பதைக் குறிப்பிடும் கட்டளை அமைப்பு.

count, record : ஏட்டு எண்ணிக்கை.

country : கன்ட்ரி : எழுத்துத் தொகுதியை அமைப்பதற்காக கணினியை இயக்கும் நேரத்தில் செயல்படுத்தப்படும் டாஸ் கட்டளை.

country code : நாட்டுக் குறி முறை.