பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

country. sys

348

CPS


country. sys : கன்ட்ரி. சிஸ் : கன்ட்ரி கட்டளை இயக்கப்படும்போது நினைவகத்தில் ஏற்றப்படும் டாஸ் முறைமைக் கோப்பு.

coupler, acoustic : கேட்பொலிப் பிணைப்பி.

coupling : இடையிணைப்பு : அமைப்புகளுக்கிடையிலோ அல்லது அமைப்பின் உறுப்புகளுக்கிடையிலோ ஏற்படும் செயல்பரிமாற்றங்கள்.

courier : கூரியர் : தட்டச்சிலிருந்து வருகின்ற ஒரே இடைவெளி உள்ள எழுத்துரு (font).

course details : பாடத்திட்ட விவரம் : பாடத் திட்டம்.

courseware : கல்விப்பொருள் : கல்விப் பயன்பாடுகளுக்கென்று கணினி நிரல்களுக்குத் தரப்பட்ட பெயர். வேதியியல், வரலாறு, கணிதம், ஸ்பானிஷ் சொல்லித் தருதல் போன்றவை இதில் அடங்கும்.

covariance : சார்பு விலக்கல் : சார்பு மாறுகை இரண்டு தற்செயல் மாறிகளின் ஒன்றையொன்று விலகிச் செல்லும் அளவுகள்.

cpi : சிபீஐ : ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துக்கள் எனப் பொருள்படும் characters per inch என்பதன் குறும்பெயர்.

CPM : சிபீஎம் : உயிர்நாடிப் பாதை முறை எனப் பொருள்படும் Critical Path Method என்பதன் குறும்பெயர்.

CP/M : சிபீ/எம் : நுண் கணினிக்கான கட்டுப்பாட்டு நிரல் எனப் பொருள்படும் Contro| Programme for Micro computer என்பதன் குறும்பெயர். நுண் கணினிகளுக்குப் பரவலாக பயன்படுத்தப்பட்ட முதல் இயக்க முறைமை (operating system), ஒரு வட்டின் மீதுள்ள நிரல்களின் தொகுப்பாகிய சிபீ/எம், கணினி அமைப்புடன் இணைந்துள்ள சாதனங்களுக்குத் தரவு மாற்றவும், நிரல்களைச் செயல்படுத்தவும், கோப்புகளை வசதியாக கையாளவும் ஆணைகளை அளிக்கிறது.

CP/M compatible : சிபீ/எம் ஏற்புடைய : சிபீ/எம் இயக்க முறைமையுடன் சேர்ந்து செயல்பட ஏற்றதாக வடிவமைக்கப்பட்ட மென்பொருளைக் குறிப்பிடுகிறது

CPS : சிபீஎஸ் : உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி