பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CPSR

349

CPU style



அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனையம் கையாள்கிறது. நேரப்பங்கீட்டினைக் கடைப்பிடிப்பதால், பயனாளர் உடனடியாக பதில் பெறுவது போலவே தோற்றமளிக்கும். நிரலாக்க மொழியின் துணைத் தொகுதி எனலாம். ஐபிஎம்மால் உருவாக்கப்பட்டது.

CPSR ; சிபீஎஸ்ஆர் : சமூக பொறுப்புணர்வுமிக்க கணினி இயலாளர் எனப் பொருள்படும் Computer Professionals for Social Responsability என்ற தொடரின் தலைப்பெழுத்துக் சமூகப் குறும்பெயர். கணினித் தொழில் நுட்பம் இராணுவத் தேவை களுக்குப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து உருவாக்கப் பட்ட ஒரு பொதுநல அமைப்பு. மனித சமூகத்தின் வாழ்வியல் உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின்மீது கணினிகளின் தாக்கம் போன்ற பிரச்சினைகளில் இவ்வமைப்பு நாட்டம் செலுத்துகிறது.

CPU சி. பீ. யு மைய செயலகம் எனப் பொருள்படும் Central Processing Unit என்பதன் பெயர்.

CPU cache : சி. பீ. யு இடை மாற்றகம் : மையச் செயலகத்தையும் முதன்மை நினைவகத்தையும் இணைக்கும் விரைவு நினைவகத்தின் ஒரு பகுதி. சி. பீ. யூ வுக்குத் தேவையான அதாவது சி. பீ. யூ அடுத்துக் கையாளவிருக்கும் தரவு மற்றும் நிறை வேற்றவிருக்கும் ஆணைகளையும் இந்த நினைவகப் பகுதி தற்காலிகமாகக் கொண்டிருக் கும். நினைவகத்துடன் ஒப்பிடுகையில் சி. பீ. யூ இடைமாற்று நினைவகம் அதிக இதிலுள்ள தரவு, தொகுதி தொகுதியாகப் பரிமாறப்படுவதால் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. சிபியூவுக்கு அடுத்துத் தேவைப் படும் தரவு எதுவென்பதை சில படிநிலைத் தருக்க முறையில் இயக்க முறைமை தீர்மானிக்கிறது. இது, இடை மாற்று நினைவகம் (cache memory) என்றும் நினைவக இடை மாற்று (memory cache) என்றும் அழைக்கப்படும்.

CPU cycle : திடீர் சூழ்ச்சி 1. மையச் செயலகம் உணர்ந்து கொள்ளுமளவுக்கான மிகச்சிறிய நேர அலகு ஒரு வினாடியில் சில பத்துக் கோடியில் ஒரு பகுதியைக் குறிக்கும். 2. ஒரு பதிவகத்தின் (register) உள்ளடக் கத்தைக் கொணர்தல் போன்ற மிக எளிய ஆணைகளை நிறைவேற்ற அல்லது செயல்