பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CPU fan

350

cray



பாடில்லா (Non-Operation-No) ஆணையை நிறைவேற்ற சி. பீ. யூ எடுத்துக் கொள்ளும் நேரம்.

CPU fan : சிபீயூ விசிறி மையச் செயலகத்தின்மீது அல்லது சிபியூவின் வெப்பக்கவர்வி மீது பொருத்தப்படும் ஒரு மின்சார விசிறி. சி. பீ. யூவைச் சுற்றிக் காற்றைச் கழலச் செய்து வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது.

CPU speed : சிபீயூ வேகம் : ஒரு குறிப்பிட்ட மையச் செயலகத்தின் தரவு செயலாக்கத் திறனின் ஒப்பீட்டு அளவுகோல். பெரும்பாலும் மெகாஹெர்ட்ஸில் அளக்கப்படும்.

CPU time : சி. பீ. யு நேரம் : நிரலின் ஆணைகளைச் செயல் படுத்துவதற்காக மையச் செயலகம் எடுத்துக் கொள்ளும் நேரம்.

. cr : . சிஆர் : ஒர் இணைய தள ரீக்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

cracker தகர்ப்பர்; உடைப்பவர் : ஒரு கணினி அமைப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து அத்துமீறி நுழையும் நபர். ஒரு கணினி அமைப்பிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக தகவலைப் பெறுதல் அல்லது கணினி வளங்களைப் பெறுதல்.

Cray

இதுவே சில தகர்ப்பர்களின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், அமைப்பின் பாதுகாப்பை வெற்றிகரமாக உடைத்து உள்நுழைவது மட்டுமே பெரும்பாலான தகர்ப்பர் களின் மைய நோக்கமாய் உள்ளது.

crash : வீழ்ச்சி மென்பொருள் தவறு அல்லது வன்பொருள் செயல் கோ ளாறினால் கணினி அமைப்பு இயங்காமல் நின்று போவது.

crash, conversion : முறிவு நிலை மாற்றம்,

crash recovery : முறிவு மீட்சி : ஒரு கணினியில் நிலை வட்டு பழுதடைவது போன்ற ஒரு பேரழிவுப் பழுதுக்குப்பின் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்க அக்கணினிக்கு இருக்கும் திறனை இவ்வாறு குறிப்பிடலாம். பெரும்பாலும், தகவலுக்கு எவ்வித இழப்பும் இல்லாமல் மீட்கப்பட முடியும். சிலவேளைகளில், முழுவதுமாக இல்லாவிட்டாலும் சிறி தளவு தரவு இழக்கப் படுவதுண்டு.

cray , கிரே கிரே ரிசர்ச் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் (சூப்பர்) கணினிகளின் வரிசை. கிரே-1 ஒரு நொடியில் 80 கோடி நிரல்களைச் செயல்படுத்தும்.