பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Cray Seymour

351

creeping featurism



பத்து இலட்சம் எழுத்துகளை சேமித்து வைக்கும். கிரே-2 ஒரு நொடியில் நூறு கோடி செயல் பாடுகளை நிகழ்த்தவல்லது.

Cray Seymour : கிரே செய்மோர் : 1980 முதல் மீத்திறன் கணினியான கிரே 1-ஐயும் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து கிரே -2 மீத்திறன் கணினியையும் வடிவமைத்து அறிமுகப்படுத்தியவர்.

CRC சிஆர்சி : சுழல்மிகைச் சரி பார்ப்பு எனப் பொருள்படும் Cyclic Redundancy Check என்பதன் குறும்பெயர். தரவுகளை அனுப்புவதில் ஏற்படும் பிழைகளைச் சோதிக்க இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.

create உருவாக்கு : 1. இருக்கின்ற கோப்பை மாற்றுவதற்குப் பதிலாக புதிய கோப்பை வட்டின்மீது உருவாக்குதல். 2. தரவுத் தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணையை வடிவமைக்கும் பொருட்டு அதில் இடம் பெறும் புலங்களின் பெயர், நீளம், தரவினம் போன்றவற்றை வரையறுக்கும் கட்டளை.

பதிலாக

create image : படிமம் உருவாக்கு.

create replica : படி உருவாக்கு

create root pane : மிகப் பாளம் உருவாக்கு.

create shortcut : குறு வழி உருவாக்கு.

creating : உருவாக்குதல்.

creation : உருவாக்கல் : தோற்றுவிப்பு.

creative designer : படைப்புத் திறன் வடிவமைப்பாளர் : கணினிப் பதிப்புத் துறையில் (டி. டீ பீ) பக்கங்களை வெளியமைப்பு செய்து வடிவமைக்கும் நபர்.

creativity படைப்பாக்கம் : படைப்புத் திறன்.

creator - கிரியேட்டர் : ஆப்பிள் மெக்கின்டோஷில் உள்ள ஒரு நிரல். ஒர் ஆவணத்தை உருவாக் கும்போது அதற்கும் அதை உரு வாக்கிய பயன்பாட்டுத் தொகுப் புக்கும் இடையே ஒரு தொடுப் பினை உருவாக்கும் நிரல் இது. ஒரு ஆவணத்தைத் திறக்கும்போது, இயக்க முறைமையானது அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்பை அடையாளம் கண்டு திறக்க இத் தொகுப்புப் பயன்படுகிறது.

credit card : பற்று அட்டை.

credit card number : பற்று அட்டை எண் : பணப் பொறுப்பு அட்டை எண்.

creeping : ஊர்தல் திரையின் குறுக்காக சொற்கள் நகர்ந்து செல்லல்.

creeping featurism : படரும் சிறப்புக் கூற்றியல் : ஒரு மென் பொருள் தொகுப்பின் புதிய