பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cryptographic techniques

358

C shell


தாய்வு :  இரகசியக் குறியீடு அமைக்கப் பயன்படுத்தப்பட்ட திறவி பற்றிய ஆரம்ப அறிவு இல்லாமல் இரகசியக் குறியீட்டு செய்தியை வழக்கமான சொற்றொடர் செய்தியாக மாற்றும் இயக்கம்.

cryptographic techniques : மறைக் குறியீட்டு நுட்பம் : மறையீட்டு நுட்பம் : ஒவ்வொரு எழுத்து அல்லது எழுத்துத் தொகுதிகளுக்குப் பதிலாக வேறு வகையான குறியீடுகளைக் கொடுத்து தரவுகளை மறைக்கும் முறை.

cryptography : மறைக் குறியீட்டியல்; மறையீட்டியல் : இரகசியக் குறியீடுகளை எழுதும் பல்வேறு முறைகளில் ஒன்று. கணினிகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியதாக சமுதாயம் ஆகிவிட்டதால், கணினிகள் மற்றும் கணினி கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு அனுப்பப்படும் ஏராளமான தரவுகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பை பெற இரகசியக் குறியீடு அமைப்பது ஒரு வழி. தந்திக்கம்பிகள், செயற்கைக் கோள்கள். நுண்ணலை அமைப்புகள் போன்ற அணுகக் கூடிய தரவு தொடர்புக் கட்டமைப்புகளில் அனுப்பப்படும் தகவலைப் பாதுகாக்க இதுவே நடைமுறைக்கு ஏற்றவழி.

crystal : படிகம் : அதற்கு சக்தி வழங்கப்படும்போது ஒரு குறிப் பிட்ட இடைவெளியில் சுழலும் படிகக் கல். இந்தச் சுழற்சிகள் கணினி அமைப்பில் உள்ள கடிகாரத்திற்கு நேரத்தைத் துல்லியமாக அளிக்க உதவுகின்றன.

crystal bistability : இருநிலைப் படிகம்.

crystal 3D : முப்பறிமாணப் படிகம்.

crystallin : படிக நிலை : படிகத்தின் திட நிலை. Neumatic-ன் எதிர்ச்சொல்.

Crystal Report : கிறிஸ்டல் ரிப்போர்ட் : தரவுத் தளங் களிலுள்ள தரவுகளில் அடிப்படையில் அறிக்கை தயாரிக்க உதவும் ஒரு மென்பொருள், விசுவல் பேசிக்கில் பெரும் பாலும் பயன்படுத்தப்படுகிறது.

cs : சிஎஸ் : செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதை அடையாளம் காட்டும், பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

C shell : சி செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறையில்