பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CSMA/CD

359

CTRL


இயங்கும் பல்வேறு கட்டளை வரி இடைமுகங்களில் இதுவும் ஒன்று. சி-செயல் தளம் மிகவும் பயனுள்ளது. ஆனால் அனைத்து முறைமைகளிலும் சி-செயல் தளம் இருக்குமென்று சொல்ல முடியாது.

CSMA/CD : சிஎஸ்எம்ஏ/சிடி : சுமப்பி உணர்வு பல்முக அணுக்கம் மோதல் அறிதல் என்று பொருள் படும் Carrier Sense Multiple Access/Collusion Deduction என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு பிணைய நெறிமுறை (Network Protocol). ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மேற் பட்ட கணுக்களில் (Nodes) கோரிக்கை அனுப்பப்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலையைக் கையாள்வதற்கான நெறி முறை. ஒவ்வொரு கணுவும் பிணையப் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். தடம், போக்குவரத்தின்றி இருக்கும்போது தகவலை அனுப்பும். அதே நேரத்தில் இன்னொரு கணுவும் தகவலை அனுப்பி மோதல் ஏற்படின் இரண்டு கணுவும் தரவு அனுப்புவதை நிறுத்திவிடும். மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு கணுவும் வேறு வேறு கால அளவுகள் காத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின் தரவு அனுப்ப முனையும்.

CSO : சிஎஸ்ஓ : 'கணிப்பணி சேவைகள் அலுவலகம்' என்று பொருள்படும் Computing Services Office என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் பயனாளர்களின் சொந்தப் பெயர்களை மின்னஞ்சல் முகவரிகளுடன் ஒப்பிட்டுத் தேடித்தரும் இணையச் சேவையாகும். இது பெரும்பாலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தேடும். கோஃபர் (Gopher) பிணையங்களின் வழியாக சிஎஸ்ஓ சேவையைப் பெறலாம். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சி. எஸ். ஓவில் இது உருவாக்கப்பட்டது.

CSO name server : சிஎஸ்ஓ பெயர் வழங்கன் : சிஎஸ்ஓ அமைப்பின் மூலம் மின்னஞ்சல் முகவரி பற்றிய தகவலை வழங்கும் ஒரு கணினி.

CT : சிடீ : Computer Tomographic என்பதன் குறும்பெயர்.

CTL சிடீஎல் : கன்ட்ரோல் (Control) என்ற சொல்லின் சுருக்கம்.

CTRL : சிடிஆர்எல் : கட்டுப் பாடு என பொருள்படும் Control என்பதன் குறும்பெயர். விசைப்