பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

current drain

362

current record number


வேறாகச் சொல்லவில்லை யென்றால், வட்டு கோப்பிற்கு வரும் நிரல்கள் நடப்புக் கோப்பகத்தையே குறிப்பிடும்.

current drain : முன்னோட்ட ஒழுக்கு : 1. ஒரு மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட மின்சாரம் பெறும் கருவி எடுத்துக் கொள்கின்ற மின்சக்தி. 2. ஒரு மின்குமிழ் விளக்கு மின்சாரத்தை எடுத்துக் கொண்டு எரிகிறது. மின்சாரம் ஒரு மின்கலனிலிருந்து வருகிறது எனில் மின் சக்தி, மின்கலனில் வடிந்து கொண்டிருப்பதாகக் கூறலாம். குமிழ் விளக்கையே ஒழுக்கு என்றும் சிலவேளைகளில் கூறுவர்.

current drive : நடப்பு இயக்ககம் :  கணினி அமைப்பால் நடப்பில் பயன்படுத்தப்படும் வட்டு இயக்ககம்.

current image : நடப்பு படிவம் 

current instruction register :  நடப்பு ஆணைப் பதிவேகம். current intensity : மின்னோட்ட வலிமை.

current location counter : நடப்பு இருப்பிட எண்ணி :  ஒரு நிரலுக்கோ அல்லது ஒரு நிலையெண்ணுக்கோ கொடுக்கப்படும் முகவரியினை முடிவு செய்ய ஒரு சேர்ப்பி வைத்திருக்கும் எண்ணி.

current loop : நடப்பு மடக்கி : மின் சமிக்கைகள் இருப்பது அல்லது இல்லாதிருப்பதை ஒட்டி துண்மிகளை அனுப்பும் தொடர் தரவு தொடர்பு வகை.

current mode logic : நடப்பு பாங்கு தருக்கம் (சிஎம்எல்) :  தன்னுடைய வடிவமைப்பில் மாறுபட்டு பெரிதாக்கி மின் சுற்றின் தன்மைகளைப் பயன் படுத்தும் தருக்க மின்சுற்று.

current page box : நடப்புப் பக்கப் பெட்டி :  டிடீபீ மென் பொருள்களில், நடப்பில் வேலை செய்கின்ற பக்கத்தினைக் காட்டுகின்ற பகுதி.

current positions : நடப்பு நிலவரம் : தற்போதைய இட நிலைமை. current pulses : மின்னோட்டத் துடிப்புகள்.

current record number : நடப்பு ஏட்டு எண் : கோப்பு அணுகலில் கோப்பு கட்டுப்பாடு கட்டமுறை மூலம், தரவுகளை 128 கட்டங்களாக ஒழுங்கு படுத்தப்படுகின்றன. நடப்புப் ஏட்டு எண் நடப்பு கட்டத்தில் இருக்கும். சான்றாக, தற்செயல் ஏடு 128-ன் நடப்பு எண் 0