பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

current value

363

CUSeeMe


ஏனெனில் கட்டம் 1-ன் முதல் பதிவேடு எண் 1. கடைசி பதி வேட்டின் எண் 127. 1இல் தொடங்கினால் கடைசிப் பதிவேடு 129.

current value : தற்போதைய மதிப்பு. cursive scanning : கோட்டு முறை வருடல் : ஒளிக்காட்சி முனையங்களுடன் பயன் படுத்தப்படும் வருடும் தொழில் நுட்பம். ஒவியன் ஒரு உருவத்தை வரைவதுபோல திரையை நோக்கி அனுப்பப் படும் எலெக்ட்ரான்கள் ஒரு நேரத்தில் ஒரு கோடு என்ற முறையில் படங்களின் வெளிப் புறக்கோடுகளைப் போடும்.

cursor : இடஞ்சுட்டி காட்டி : 1. அடுத்த எழுத்து திரையில் எங்கே தோன்றும் என்பதைக் காட்ட மினுமினுக்கும், நகரும், வழுக்கும் குறியீடு. 2. ஒளிக் காட்சி முனைப்பில் திருத்த வேண்டிய ஒரு எழுத்தையோ அல்லது நுழைக்க வேண்டிய தரவுகளின் இடத்தையோ குறிப்பிடும் இடம் உணர்த்தி.

cursor blink speed : காட்டி மினுக்கு வேகம் : இடஞ்சுட்டி மினுக்கு வேகம் : திரையில் தோன்றும் காட்டி, தோன்றி மறைந்து மினுக்குகின்ற வேகம்.

cursor control : காட்டிக் கட்டுப்பாட்டு  : திரையில் எந்த இடத்துக்கும் ஒளிக்காட்சி உணர்த்தும் குறியீட்டை நகர்த்தும் திறன்.

cursor control keys : காட்டிக் கட்டுப்பாட்டு விசைகள் : காட்சித்திரையில் காட்டியை நிலைநிறுத்த உதவும் விசைப் பலகையின் விசைகள். சுற்று வடிவில் அமைக்கப்பட்டால் பயன்படுத்த எளிதாக இருக்கும்.

cursor key : காட்டிக் விசை; இடஞ்சுட்டி விசை; சுட்டுக்குறி விசை.

cursor tracking : சுட்டி இயங்குதல் : கணினியுடன் இணைந் துள்ள எழுத்தாணி அல்லது சுட்டியை நகர்த்துவதன் மூலம் காட்சித் திரையில் காட்டியை நிலை நிறுத்துவது

curve fitting : வளைவு பொறுத்தல்; வளைக் கோட்டுப் பொருத் தம் : தரவு புள்ளிகளின் தொகுதியைக் குறிப்பிட ஒரு சூத்திரத் தைக் கண்டறிய உதவும் கணித நுட்பம். ஒரு புள்ளியில் பொருந் தும் கோடுகளில் சிறந்தது எது என்பதைக் கண்டுபிடித்து அமைப்பதற்கு இந்த சூத்திரம் பயன்படுகிறது.

CUSeeMe : சியூசீe : கார்னெல் பல்கலைக்கழகம் (Cornel