பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

367


பண்பாட்டை இது குறிப்பிடுகிறது.

cyborg : சைபோர்க் : மின்னணு மற்றும் மின்னியந்திர ரோபோவின் உறுப்பினை வைத்திருக்கும் மனிதர்.

cycle : சுழற்சி : கணினி சேமிப்பகம் தொடர்பானது. ஒரு கணினி அல்லது அதன் சேமிப்பக சாதனத்தில் இருந்தோ, அதற்கோ தகவலை மாற்றல் செய்யும்போது ஏற்படும் தொடர் நிகழ்வுகள். ஒரு முகவரியைக் குறிப்பிட்டு, அதன் தகவலை வெளியேற்றி அடுத்ததைத் தேடத் தயாராக இருத்தல்.

cycle code சுழற்சிக் குறிமுறை.

cycle per second : ஒரு நொடிக்கு சுழற்சி : ஒரு நொடியில் எத்தனை தடவைகள் ஒரு நிகழ்வு அல்லது நிகழ்வுகளின் தொகுதி திரும்பச் செய்யப்படுகிறது என்பது. பார்க்க : ஹெர்ட்ஸ்.

cycle power : சுழற்சித் திறன் : நினைவகத்தில் உள்ள சில தரவுகளை துடைக்கும் பொருட்டு அல்லது கணினி செயலிழக்கும்போது அதற்குப் புத்துயிர் ஊட்டும் பொருட்டு கணினிக்குத் தரும் மின்சாரத்தை நிறுத்தி, மீண்டும் வழங்குவது.

cycle stealing : சுழற்சித் திருடல் : உள்ளிட்டு வெளியீட்டு மின்பாட்டையின் கட்டுப்பாட்டைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து வெளிப்புறச் சாதனம் ஒன்றை அனுமதிக்கும் நுட்பம். இதன்மூலம் கணினியில் உள் நினைவகத்தை அணுக அந்தச் சாதனம் அனுமதிக்கப்படுகிறது.

cycle reset : சுழற்சி மாற்றமைவு : சுழற்சி திரும்ப அமைதல்.

cycle time : சுழற்சிநேரம் : 1. தொடர் செயலின் தொடக்கத்தில் இருந்து சேமிப்பக இருப்பிடத்திற்குப் போய்ச் சேரும் வரை இடைவெளியின் குறைந்தபட்ச நேரம். 2. ஒரு பதிவுத் தொகுதியில் தகவலை மாற்ற தேவைப்படும் நேரம்.

cyclic binary code : சுழற்சி இருமக் குறிமுறை : இரும எண் முறையில் ஒரு வகை. பதின்ம எண்களை (Decimal Numbers) இரும வகைக்கு மாற்றும்போது எந்தவொரு இரும எண்ணும் முந்தைய இரும எண்ணோடு ஒப்பிட்டால் ஒரேயொரு துண்மி (bit) மட்டுமே மாறி இருக்க வேண்டும். 0111, 0101 ஆகிய இரு எண்களில் நடுத் துண்மி மட்டுமே மாறி இருக்கிறது.