பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

daisy printer

371

daisy wheel printer


தனியொரு தடம் நெடுகிலும் மையச்செய்முறை அலகுடன் புறநிலைச்சாதனங்கள் இணைக் கப்பட்டுள்ள ஒர் இடைத் தடுப்பு பொறியமைவு.

daisy printer : டெய்சி அச்சுப் பொறி.

daisy wheel : டெய்சி சக்கரம் : தளமட்டச் சக்கரம் : டெய்சி சக்கர அச்சிடு கருவியில் உள்ள அச்சிடு சாதனம். நடுவில் குறுக்குக் கம்பியில் எழுத்துகள் புடைப்பு முறையில் அமைக்கப்பட்டிருக்கும். டெய்சி என்பது ஒரு மலர். அந்த மலரின் இதழ்களை ஒத்திருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

தளமட்டச் சக்கரம்

daisy wheel printer : டெய்சி சக்கர அச்சுப்பொறி; தளமட்டச் சக்கர அச்சுப் பொறி; தளமட்ட அச்சு எந்திரச் சக்கரம : அச்சிடு கருவி. இதில் ஒரத்தில் அச்சிடப் பட்ட எழுத்துகளைக் கொண்ட உலோக அல்லது பிளாஸ்டிக் தகடு பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தட்டு தேவையான எழுத்து சுத்தி ஒன்றின் முன்னே வரும் வரை சுழற்றப்படுகிறது. கத்தி அந்த எழுத்தினை மைநாடா ஒன்றின் மீதுதட்டுகிறது . பிரபலமான தரமான அச்சிடு