பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DAL

372

DASD


கருவி தனிப்பட்ட கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது.

DAL (Data Access Language) : டிஏஎல் : தரவு அணுகு மொழி என்று பொருள்படும் "Data Access Language" என்பதன் குறும்பெயர். ஆப்பிள் (Apple) கணினியிலுள்ள தரவு தள இடைமுகப்பு. இது, ஆதாரத் தரவு Mac என்ற நுண் கணினிகளில் அல்லது 'ஆப்பிள்' அல்லாத கணினிகளில் அணுகுவதற்கு அனுமதிக்கிறது.

DAM (Direct Memory Access) : டிஏஎம் - நேரடி நினைவக அணுகல்.

damping : தளர்வூட்டுதல் : தேவைப்படாத அல்லது மிகையான ஊசலாட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு மின்னணு அல்லது எந்திரச் சாதனத்தை நிலைப்படுத்துவதற் கான உத்தி.

dark bulb : கருங்குமிழ் : ஒரு வகையான கத்தோட் கதிர்க் குழாய், நிறுத்தப்பட்டதும் ஏறத் தாழ கறுப்பு நிறத்தை அடைந்துவிடுகிறது. அது ஒளிக் காட்சிகளுக்கு சிறந்த பின்புலமாகி விடுகிறது.

darkest : மிகு இருள்மை.

dark fiber : கருப்பு ஒளியிழை : கரு ஒளியிழை : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ஒளியிழை வடங்களில் பயன்பாட்டில் இல்லாத இழைகளை கறுப்பு ஒளியிழை என்று அழைப்பர்.

darkness : இருட்டு.

darlington circuit : டார்லிங்டன் சுற்று வழி : இரண்டு மின்மப் பெருக்கிகளை (Transistor) ஒன்றாக இணைத்துப் பயன்படுத்துகிற மின்பெருக்கச் சுற்றுவழி.

DARPA net : டார்ப்பா நெட் : அமெரிக்காவின் பாதுகாப்பு உயர்நிலை ஆராய்ச்சித் திட்டப் பணி முகமை எனப் பொருள்படும் Defense Advanced Research Projects Agenc என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

dart , டார்ட் : கணிப்பொறியமைவில் ஏற்படும் தவறுகளை வாடிக்கையாளரின் இடத்திலேயே கண்டுபிடிப்பதற்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், பன்னாட்டு வணிக எந்திரக் கழகமும் (IBM) சேர்ந்து வகுத்துள்ள ஒரு கூட்டுத் திட்டம்.

DASD : டிஏஎஸ்டி : நேரடித்தொடர்பு சேமிப்புச் சாதனங்களுக்கனா 'Direct Access Storage Device' என்பதன் குறும்பெயர்.