பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dash style

373

data analysis


dash style : கீறுகோட்டுப் பாணி.

DAT : டாட் : இயங்குநிலை ஆணை மொழிமாற்று'என்று பொருள்படும். Dynamic Address Translation என்பதன் குறும்பெயர்.

data : தரவு, தகவல்; செய்திக் குறிப்பு; விவரம் : முறைப்படுத்தப்பட்ட வடிவில் வழங்கப்படும் உண்மைகள் அல்லது கருதுகோள்கள். மனிதர்கள் அல்லது தானியக்க முறையில் தொடர்பு கொள்ளல், கருத்துக் கூறல் அல்லது வகைப்படுத்துதலுக்கு பொருத்தமானதாகும் : வகைப்படுத்தப்படாத தரவுகள் (உ-ம்) விரிப்புகளுக்கான டாலர் விலை, வழங்கப்பட்ட கட்டட அனுமதிகள். வரலாற்றுக் காலம் தொட்டு டேட்டா என்பது பன்மைப் பெயர் ஆகும். டேட்டம் என்பது ஒருமைப் பெயர் ஆகும். இந்த வேறுபாடு தரவு முறைப்படுத்தும் தொழில் துணுக்கத்தில் பொதுவாகப் புறக்கணிக்கப்படுகிறது.

data abstract : தரவுச் சுருக்கம்.

data abstraction : தரவு உருவாகம் : பொருள் சார்ந்த செயல் முறைப்படுத்தலில், பயனாளர் வரையறுத்த தரவு வகைகளை உருவாக்குதல். இவை, சொந்தமான தரவுகளையும், செய்முறை யையும் கொண்டிருக்கும்.

data acquisition : தரவு ஈட்டல் : புள்ளிவிவரம் பெறல், தரவு பெறல். தொலைதூரத் தளங்களிலிருந்து தரவுகளை மத்திய கணினி அமைப்பு ஒன்றினால் பெறுதலாகும். புறஉணர்விகளிலிருந்து தரவுகளைச் சேகரித்தலாகும்.

data administration : தரவுத் தள மேலாளர் மேலாண்மை : தரவு மேலாளர் மேலாண்மை தரவு தளத்தின் தொழில்நுட்ப வடி வமைப்பும் மேலாளர் மேலாண்மையும் தரவு நிருவாகம் எனப்படும். இதில், ஒர் அமைவனத்தின் தரவுத் தொடர்புகளின் பகுப்பாய்வு, வகைப்பாடு, பராமரிப்பு ஆகியவை அடங்கும். தரவு உருமாதிரிகள், தரவு விவர ஏடுகள் ஆகியவற்றை உருவாக்குவதும் இதில் சேரும். இவை தரவு தள வடிவமைப்புக்கு மூலப் பொருள்களாக அமையும். தரவுகளை ஒர் அமைவனத்தின் ஒட்டு மொத்த மேலாண்மைக்கு தரவு நிருவாகப் பணிகள் உதவுகின்றன.

data aggregate : தரவுத் தொகுதி : ஆவணம் ஒன்றிற்குள் உள்ள தரவு வகைகளின் தொகுப்பு. பெயர் ஒன்று தரப்பட்டு தொகுப்பு என்று குறிப்பிடப்படுகிறது.

data analysis : தரவுப் பகுப்பாய்வு.