பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data analysis package

374

database analyst


data analysis package : தரவுத் தளப் பகுப்பாய்வுத் தொகுதி : தரவு பகுப்பாய்வுத் தொகுதி : குறிப்பிட்ட ஒரு சில முடிவு களைப் பெறுவதற்காகக் கட்டமைப்புக்கும், தரவுகளைச் சீரமைப்பதற்கும் பயன்படும் ஒரு மெல்லினச் சாதனம். ஒரு மின்னணுவியல் அகல் தட்டுச் செயல்முறை இதற்கு எடுத்துக்காட்டு.

data area : தரவு பகுதி.

data attribute : தரவின் பண்புக் கூறு : விவரத்தின் பண்பியல்பு : ஒரு தரவின் இடம், பொருள், ஏவல் பற்றிய கட்டமைப்பு விவரங்கள்.

data bank : தரவு வங்கி : தரவு நூலகங்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஆகும். 2. நெருக்க மில்லாத தொகுப்பு எனும் நிலையில் தரவு அடிப்படை என்று கூறப்படுகிறது.

database தரவுத் தளம் : தரவு மேலாண்மைப் பொறியமைவினால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் ஒன்றுக்கொன்று தொடர் புடைய கோப்புகளின் தொகுதி. மின்னணுவியல் முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் தொகுப்பு. தருக்க முறையில் தொடர்புடைய பதிவேடுகளின் அல்லது கோப்புகளின் ஒரு தொகுப்பு. ஒரு தரவுத் தளம், பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

database administration : தரவு தள நிருவாகம் : ஒர் அமைவனத்தின் தரவு அகராதியைத் தயாரித்துப் பேணி வருதல், தரவு தளத்தின் செயல் முறையை வடிவமைத்துக் கண்காணித்து வருதல், தரவு தளப் பயன்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் தர அளவுகளைச் செயற்படுத்துதல் முதலிய பல பணிகள் இதில் அடங்கும்.

database administrator : தரவு தள நிருவாகி : தரவுத் தளத்தின் இயற்பியல் வடிவமைப்புக்கும், மேலாண்மைக்கும், அதன் பொறியமைவின் மதிப்பீட்டுக்கும், தேர்வுக்கும், செயற்பாட்டுக்கும் பொறுப்பாக இருப்பவர். சிறிய அமைவனங்களில், தரவுத் தள நிருவாகி, நிருவாகி இருவரின் பணியும் ஒன்றுதான். ஆனால், இரு பொறுப்புகளும் தனித்தனியே மேலாண்மை செய்யப்படும்போது தரவுத் தள நிருவாகியின் அதிகம் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருக்கும்.

database analyst : பகுப்பாய்வாளர் : வடிவமைப்பு