பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data base broadcasting

375

database management


மற்றும் தரவு அடிப்படைச் சூழலில் தரவு அமைப்பை அமல்படுத்துதலில் முக்கிய நபர் ஆவார்.

database broadcasting : தரவுத் தள அலைபரப்பு.

database concept : தரவுத் தள கருததுரு.

database definition language : தரவுத் தள வரையறை மொழி : ஒரு தகவலை உருவாக்கி, சேமித்து வைத்து, மேலாண்மை செய்வதற்கு தரவு நிருவாகி பயன்படுத்தும் ஒரு மொழி.

database design : தரவுத் தள வடிவமைப்பு.

database designer : தரவுத் தள வடிவமைப்பாளர்;தரவுத்தள திட்ட அமைப்பாளர் : ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர்.

database driver : தரவுத்தள இயக்கி : ஒரு தரவுத் தளத்தை அணுகுகிற மெல்லின வாலாயம். இது ஒரு குறிப்பிட்ட தரவுத் தளத்தை அணுகுவதற்கு ஒரு தொகுப்பாணை அனுமதிக்கிறது.

database engine : தரவுத்தளப் பொறி : தரவுத் தள இயக்கக் கருவி. ஒரு தரவுத் தள மேலாண் அமைப்பை அணுகித் தரவுகளை எடுத்தாள வழியமைத்துக் கொடுக்கும் நிரல் தொகுதிகளைக் கொண்ட மென்பொருள்.

database environment : தரவுத்தள தளச் சூழல் : பயன்படுத்துவோர், தரவு மற்றும் தரவுத்தளத்தை அமல்படுத்துவதால் விளையும் சுற்றுச் சூழல்.

database machine : தரவுத்தள எந்திரம் : தரவுத் தளத்தை அணுகு வதற்காகத் தனிவகையில் வடிவமைக்கப்பட்ட கணினிப் பொறி. இது முதன்மைக் கணினிப்பொறியுடன் அதிவேக வழி வாயிலாக இணைக்கப் பட்டிருக்கும். இது விரைவான வட்டு தேடுதலுக்காக பன்முகச் செய்முறைப் படுத்திகளைப் பயன்படுத்துகிறது.

database management : தரவுத் தள நிர்வாகம், தரவுத் தள மேலாண்மை : கோப்பு ஒன்றில் ஆவணங்களின் வடிவில் தரவு வகைகளை சேமித்தல், நாளது தேதிக்கு மேம்படுத்துதல், மீண்டும் பெறல். தொலைதுார அமைப்புகளின் மூலம் பல பயனாளர் பலரும் பொதுவான தரவு

வங்கிகளைப் பயன்படுத்த முடியும்.