பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

database management

376

database server


database management approach : தரவுத் தள மேலாண்மை அணுகுமுறை : தரவுகளைச் சேமித்தல், செய்முறைப்படுத்து தல் பற்றிய அணுகுமுறை. இதில், தனித் தனிக் கோப்புகள் ஒரே தொகுதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, அல்லது தள பதிவுகளாக்கப்பட்டு, செய்முறைப்படுத்துவதற்காகவும், தரவு மீட்புக்காகவும் பயனாளருக்குக் கிடைக்குமாறு செய்யப்படுகின்றன.

database management system : (DBMS) தரவுத் தள மேலாண்மை முறைமை : ஒரு கணினிமய மாக்கப்பட்ட தரவுத் தள கோப்பு ஒன்றை உருவாக்கவும் கோப்பில் புதிய தரவுகளைச் சேர்க்கவும், கோப்பில் உள்ள தரவுகளை மாற்றவும், கோப்பிற்குள்ளேயே தரவுகளை வகைப்படுத்தவும், கோப்பில் தரவுகளைத் தேடவும், மற்றும் பிறவற்றுக்கும் இடமளிக்கிற, வகைப்படுத்துகிற வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் தொகுப்பாகும். கோப்பு நிர்வாகியுடன் ஒப்பிடவும்.

database manager : தரவுத் தள மேலாளர் : தரவுகளை கணினியில் ஏற்ற, திரட்ட, வகைப் படுத்த, தரவுகளைப் பெற பயன்படுத்த ஒருவரை அனு மதிக்கும் நிரல் தொகுப்பு.

database objects : தரவு தளச் செயல்பாடு.

database operation : தரவு தளப் பண்புகள்.

database packages : தரவு தள தொகுப்புகள் :

database publishing : தரவு தள வெளியீடு : தரவுத் தளப் பிரசுரம், தரவுத் தள அறிக்கை : ஒரு தரவுத் தளத்திலுள்ள விவரங்களைத் திரட்டி அறிக்கையாகத் தயாரித்து, கணினிப் பதிப்பக முறாஇயில் (Desk Top Publishing) அல்லது இணையத் தொழில் துட்ப அடிப்படையில் வெளி யிடும் முறை.

database query language : தரவுத் தள வினவு மொழி : ஒரு தரவுத் தளத் தொகுதியின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒர் ஆணை அல்லது செயல்முறைப்படுத்தும் மொழி. இந்த மொழி, தரவுத் தளத்திலிருந்து தரவுகளை வர வழைத்துக் கையாள்வதற்குப் பயனாளரை அனுமதிக்கிறது.

database server : தரவு தள ஏவலர்  : ஒர் உள்ளகப் பகுதி இணையத்தில் (Local Area Network) தரவுத் தளத்தைச்