பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

database specialist

377

data byte


சேமித்து வைப்பதற்கும், மீட் பதற்குமான கணினி. இது, கோப்பு ஏவலர் (File Server) என்பதிலிருந்து வேறுபட்டது. இது பலவகைக் கோப்புகளையும் செயல்முறைகளையும், பகிர்ந்து பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்கிறது.

database specialist : தரவுத்தள வல்லுநர் : தரவுத் தளங்களுடன் பணிபுரிவோர்.

database splitter : தரவுத்தள பிரிப்பி.

database structure : தரவுத்தளக் கட்டமைப்பு : தரவுத்தள வடி வமைப்பு : ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர் (data type) இவற்றைப் பற்றிய தரவுகளை உள்ளடக்கிய வடிவமைப்பு பற்றிய பொதுவான விளக்கக் குறிப்பு. database utilities : தரவுத்தள பயன்கூறுகள்.

database wizard . தரவுத்தள வழிகாட்டி.

data bits : தரவு துண்மிகள் : ஒத்திசைவில்லாதரவு பிட்டுகள் : தரவுத் தொடர்பில், அனுப்பப்படும், ஒரெழுத்தைக் குறிக்கும் எட்டுத் துண்மிகளில் 5 முதல் 8 வரையுள்ள துண்மிகளை இவ்வாறு அழைப்பர். தரவுத் துண்மிகளுக்கு முன்பாக தொடக்கத் துண்மி (start bit) அனுப்பபடும். அதன்பின், சமன் துண்மி (parity bit) அனுப்பபடும். சமன் துண்மி அனுப்பப்படாமலும் இருக்கலாம். இறுதியில் ஒன்றிரண்டு நிறுத்த துண்மிகள் (stop bits) அனுப்பி வைக்கப்படும்.

data broadcasting : தரவு அலைபரப்பு.

data buffer : தரவு இடையகம் : கணினிச் செயல்பாட்டில் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவலை அனுப்பி வைக்கும்போது, தற்காலிகமாக இருத்தி வைக்கப்படுகின்ற நினைவகப் பரப்பு.

data bus : தரவுத் தடம்; தரவுப் பாட்டை : தரவு விவரங்களைக் கடத்துகிற ஒயர்களின் தொகுப்பு முறை. தரவுகளைப் பரிமாற, அது மத்திய முறைப்படுத்தும் அலகின் சேமிப்பையும் கணினியின் எல்லா உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு கருவிகளையும் இணைக்கிறது.

data byte : தரவு எண்மி : எண்மி : துண்மி இரட்டை இலக்க எண் தரவு கணினியின் ஒரு