பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data chaining

379

data communications


களிடமிருந்து வெளிப்பாடு களைப் பெற்று வெளியிடுகிறது.

data chaining : தரவு சங்கிலி இணைப்பு : தரவு வகைகளை இணைப்பதற்கான ஒரு செய்முறை. ஒவ்வொரு தரவு இனத்திலும், அடுத்த இனத்தின் அமைவிடம் அடங்கியிருக்கும்.

data channel : தரவு வழி : தரவுத் தடம் : இரு புள்ளிகள் அல்லது கருவிகளுக்கிடையிலான தரவுத் தொடர்பு இணைப்பு.

data channel multiplexer : தரவுத் தட ஒன்றுசேர்ப்பி.

data checks : தரவுச் சேர்கைகள் : தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கு முன்பு அதில் செல்லுபடியாகாத தரவுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் பல்வேறு சோதனைகள்.

data clerk : தரவு எழுத்தர் : கணினி ஒன்றில் எழுத்தர் பணிகளைச் செய்யும் ஒருவர்.

data collection : தரவுத் திரட்டு : தரவுத் தொகுப்பு : 1. தரவுகளை வகைப்படுத்தும் முறைமை ஒன்றில் சேர்க்க ஆதாரத் தரவுகளைச் சேகரித்தல். தரவுகளைச் சிறைப்பிடித்தல் என்றும் கூறுவார்கள். 2. ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களில் இருந்து ஒரு மையப் பகுதிக்கு தரவுகளைக் கொண்டுவந்து சேர்த்தல்.

Data collection form : தரவுத் திரட்டுப் படிவம்.

data command : தரவு ஆணை : ஒர் இடைவெளியைத் தொடர்ந்து எழுத்துகள் வரும் அமைப்புடைய ஒர் ஆணை. இது, சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளின் சில பழைய வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

data communication equipment : தரவுத் தொடர்புக் கருவி : ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தரவுகளைக் கடத்துவதுடன் தொடர்புடைய துணைக் கருவி. எடுத்துக்காட்டு : மோடெம்கள், தொலை தூர முனையங்கள் மற்றும் தரவுத் தொடர்பை வகை செய்யும் கருவிகள், உள் வீட்டு, வெளியீட்டு வழிகள்.

data communications : தரவுத் தொடர்புகள் : குறியீடாக்கிய தரவுகளைக் குறிப்பிட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி அனுப்புதல். இதற்கு, உள்ளுர் அனுப்பீட்டுமுறை எதுவும் அல்லது நிலம், ஆகாயம் அல்லது கடல்வழியான தொலைத் தொடர்புமுறை எதுவும் பயன் படுத்தப்படுகிறது.